• Sep 20 2024

வித்தியாசமான உடையில் ஜெனிலியா... அதுவும் இத்தனை கலரா...!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் அதிகளவில் கொண்டாடப்பட்ட நடிகைகள் வரிசையில் பலர் உள்ளனர். அதில் க்யூட்டான எக்ஸ்பிரஷன் கொடுத்து அழகாக படங்களில் நடித்து மக்களின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை ஜெனிலியா. 


மேலும் இவர் 'பாய்ஸ்,சச்சின், சந்தோஷ் சுப்ரமணியம்' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகையாக மாறி இருந்தவர். இவரின் குழந்தைத்தனமான நடிப்பிற்கும், அழகிற்கும் மயங்காத ரசிகர்களே இல்லை.


தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிப் படங்களிலும் நடித்திருந்தார். சினிமாவில் அவரது மார்க்கெட் குறையாது இருக்கும் வரை தொடர்ந்து நடித்தார். 

அதனைத் தொடர்ந்து பின்னர் பாலிவுட் நடிகர் ரித்தேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் இணைந்து கொண்டார்.


தற்போது அவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இன்ஸ்டாவில் எப்போதுமே ஆக்டீவாக இருக்கும் அவர் நிறைய புகைப்படங்களை வெளியிடுவார். 


அந்தவகையில் தற்போதும் பஞ்சவர்ண உடையணிந்து தனது புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை ஜொள்ளு விட வைத்திருக்கின்றார் நடிகை ஜெனிலியா.

Advertisement

Advertisement