• Nov 11 2024

ஆறு வாரங்களில் ஜெனிலியா செய்த செயல்-எப்படி முடிந்தது..? வைரலாகும் வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

திரையுலகில் தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி எனப் பல மொழிப் படங்களிலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் பேமஸ் ஆன ஒருவரே நடிகை ஜெனிலியா. இவர் தன்னுடைய கியூட்டான சிரிப்பு மற்றும் குறும்புத்தனமான நடிப்பு என்பவற்றின் மூலம் பல இளைஞர்களின் மனங்களில் நீங்காத இடம் பிடித்திருக்கின்றார்.

தமிழ் சினிமாவில் இவரைத் தொடர்ந்து எத்தனையோ நடிகைகள் வந்திருந்தாலும் இன்றும் பல ரசிகர்களின் மனங்களில் கனவுக் கன்னியாகவே வலம் வந்து கொண்டிருக்கின்றார். அதற்கு காரணம் வெகுளித்தனமான நடிப்பு, புன்னகை பொங்கும் முகம், எந்த உடை அணிந்தாலும் நச்சுன்னு இருக்கும் உடல் கட்டு போன்றன இவரை மற்ற நடிகைகளிடம் இருந்து வித்தியாசப்படுத்தி காட்டியது.

பிசியாக இருந்த ஜெனிலியா கடந்த 2012 ஆம் ஆண்டு ரித்தேஷ்தேஷ்முக் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடித்து வந்த ஜெனிலியா சமீபத்தில் ஹிந்தி மராத்தி, தெலுங்கு படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.

ஜெனிலியா தனது கணவர் உடன் அடிக்கடி வேடிக்கையான வீடியோக்களை பகிர்ந்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார்.இந்நிலையில் நடிகை ஜெனிலியா தனது சோசிய மீடியாவில் வீடியோ ஒன்றை பதிந்துள்ளார் .அந்த வீடியோ பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது. அதாவது தனது உடல் எடையை குறைத்தது குறித்தான அனுபவங்களை இன்ஸ்டா வாயிலாக பகிர்ந்துள்ளார் ஜெனிலியா. அதில் ஆறு வாரங்களில் நான்கு கிலோ எடையை குறைத்த கதையை பகிர்ந்துள்ளார். தனது உடற்பயிற்சி பயணத்தை பற்றி ஒரு நீண்ட ஊக்கமளிக்கும் குறிப்பையும் எழுதி உள்ளார். அவர் அதிக நம்பிக்கையுடன் இருப்பதாக வெளிப்படுத்தியுள்ளார்.

அத்தோடு வீடியோவில் ஜெனிலியா தனது ஜிம் பயிற்சியாளருடன் கடுமையான பயிற்சி பெறுகிறார். ஜான் ஆபிரகாம் மற்றும் அவரது கணவர் ஆகியோருடன் காணப்படுகிறார்.

அவர்கள் இந்த செயல்முறையில் உதவுகிறார்கள். இந்த வீடியோவுடன் ஜெனிலியா, 'தனது பயணத்தை தொடங்கும் போது 59.4 கிலோவாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். 6 வாரங்கள் தீவிர உடற்பயிற்சி செய்த பின் இப்போது 55.1 கிலோவாக இருப்பதாகவும் கூறியுள்ள நடிகை, இது 59.4 கிலோவிலிருந்து 55.1 கிலோ வரை ஒரு சிறந்த பயணம்.

அத்தோடு நான் நிறைய சந்தேகங்கள் நிறைய பாதுகாப்பின்மையுடன் தொடங்கினேன். ஆனால் இன்று இலக்கு எட்டுவதை தவிர நான் மிகவும் நம்பிக்கையுடனும் ஒழுக்கத்துடன் உணர்கிறேன். ஒவ்வொரு முறையும் நான் சோர்வடையாமல் இருக்க விரும்புகிறேன்.அத்தோடு டயட் பற்றி நான் பேச வேண்டும் ஒவ்வொரு முறையும் என் அளவு அதிக எடையை காட்டும்போது குற்ற உணர்ச்சியால் உறைந்து போனேன். உடற் தகுதியில் எடை மட்டுமே முக்கியம் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் முடிந்தவரை வெளிப்படை தன்மையுடன் இருக்கப் போகிறேன்.

மேலும் நல்ல நாட்களைக் கொண்டு வருகிறேன். அவ்வளவு நல்ல நாட்களும் இல்லை. அதுவரை.. விரைவில் சந்திப்போம் என குறிப்பிட்டுள்ளார். இவரது வீடியோக்களுக்கு ரசிகர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement