• Sep 20 2024

கயலை வெளியே துரத்தும் வடிவு... கடத்தப் பிளான் போடும் கௌதம்... கோபத்தின் உச்சத்தில் எழில் கொடுத்த அதிர்ச்சி... 'கயல்' சீரியல் ஸ்பெஷல் ப்ரோமோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் அடுத்தடுத்து விறுவிறுப்பான கட்டங்கள் நடந்து வரும் நிலையில், தற்போது திடீர் திருப்பமாக மற்றுமோர் விடயம் வெளியாகி இருக்கின்றது. இதனை தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோ மூலமாகத் தெரிந்து கொள்வோம்.


இதில் எழில் திருமணம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது, இந்தத் திருமண நிகழ்வில் கயல் குடும்பத்துடன் கலந்துகொள்கிறார். அப்போது வடிவு கயலை வெளியே போ இல்லாவிட்டால் கழுத்தை பிடித்து வெளியே தள்ளிவிடுவேன் என கூறுகின்றார்.


இதனால் வடிவு மேல் செம்ம காண்டாகியுள்ளார் எழில். உடனே வடிவை பார்த்து கயல் வெளியே போனால் நானும் வெளியே போய்விடுவேன் என கூறவே வடிவு அதிர்ந்து போயுள்ளார். மேலும் மறுபுறம் கௌதம் கயலை கடத்தப் பிளான் போடுகின்றார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது.


Advertisement

Advertisement