• Sep 21 2024

நடிகர் அர்ஜுன் கபூருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த காதலி மலைகா அரோரா

stella / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவுட் திரையுலகில் இளம் கதாநாயகனாக வலம் வருபவர் நடிகர் அர்ஜுன் கபூர். இவர் சினிமாவில் "Ishaqzaade' என்ற திரைப்படத்தின் மூலமாகவே நடிகராக அறிமுகமானார். மேலும் இவர் தமிழ் சினிமாவில் "நேர் கொண்ட பார்வை, வலிமை, நெஞ்சுக்கு நீதி" போன்ற படங்களை தயாரித்து வருகின்ற தயாரிப்பாளர் போனி கபூரின் மகன் ஆவார்.

நடிகர் அர்ஜுன் கபூர் "உயிரே" என்ற படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து "தக்க தைய்யா தைய்யா" என்ற பாடலுக்கு நடனம் ஆடிய கவர்ச்சி கன்னி மலைகா அரோராவை காதலித்து வருகின்றார். மேலும் மலைகா அரோரா நடிகர் சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கானின் மனைவியும் ஆவார். எனினும் திருமணமான சில ஆண்டுகளிலேயே கருத்து வேறுபாடு காரணமாக கணவனைப் பிரிந்து விட்டார். இவர்களுக்கு ஒரு மகனும் உண்டு.

மலைகா அரோராவை விட அர்ஜுன் கபூர் 12 வருடங்கள் இளமையானவர் ஆவார். மேலும் இவர் 2016-ஆம் ஆண்டு முதல் அவருடன் திருமணம் செய்து கொள்ளாமலே பார்ட்னராகவும் வாழ்ந்து வருகின்றார்.

இந்நிலையில் நடிகர் அர்ஜுன் கபூர் ஜூன் 26-ஆம் திகதி தனது 37-ஆவது பிறந்தநாளைக் கொண்டாட உள்ள நிலையில் அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் அவரை வெளிநாட்டு சுற்றுலா அழைத்து சென்றுள்ளார் அவரின் காதலி மலைகா அரோரா. எனினும் இவர்கள் எந்த நாட்டுக்குச் சென்றுள்ளார்கள் என்பது குறித்த தகவல் இன்னமும் வெளியாகவில்லை.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement