• Sep 20 2024

விஜய் சேதுபதியை திட்டுங்க பகத் பாசிலுக்கு ஒரு கிஸ் கொடுங்க- நடிகை குஷ்புவின் வைரலாகும் பேட்டி

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உலக நாயகன் என்று அழைக்கப்படும் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி நேற்றை தினம் வெளியாகிய திரைப்படம் தான் விக்ரம். இந்தப்படத்தை இளம் மாஸ் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளார்.

இப்படம் வெளியாகிய நாளிலிருந்து விமர்சன சீரியாகவும் வசூல் ரீதியாகவும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்று வருகின்றது. இப்படத்தை பார்த்த பிரபலங்கள் ரசிகர்கள் பலரும் தமது விமர்சனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்பொழுது நடிகை குஷ்பு இப்படத்தை பார்த்ததோடு தனது கருத்தினையும் கூறியிருக்கிறார். அதில் கமல் சேருடன் பல படங்களில் நடிச்சிருக்கிறேன். அவர் இந்திய நடிகர் என்று சொல்லமாட்டேன். உலகத்துக்கே பொதுவான நடிகர் என்று தான் கூறுவேன்.

இப்படத்தை லோகேஷ் வேற லெவவில் எடுத்திருக்கிறாரு. அரசியல் பேசிற நேரமில்லை. இந்தப்படம் பக்கா என்டர்டெயின்மன்ட். இந்தப்படத்தில கமல் சேர் நடிப்பு சூப்பர். அதே போல விஜய் சேதுபதி பார்க்கிறவங்கள கடுப்பேத்திற மாதிரி நடிச்சிருக்கிறாரு. இந்தப் படத்தை எல்லாரும் பாருங்க பார்த்து விஜய் சேதுபதியை திட்டுங்க பகத் பாசிலுக்கு ஒரு கிஸ் கொடுங்க எல்லாருமே சூப்பரா பண்ணியிருக்கிறாங்க என்று கூறியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement