• Sep 20 2024

நடிகை கங்கனாவை சந்தித்ததில் மகிழ்ச்சி- இசையமைப்பாளர் ஜு.வி பிரகாஷ் போட்ட பதிவால் குழப்பத்தில் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் ஏ. எல் விஜய்யின் இயக்கத்தில் வெளியான தலைவி திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் பிரபல்யமான நடிகையாக வலம் வருபவர் தான் கங்கனா ரணாவத் . பாலிவவூட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர் தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாம் தூம், படத்தின மூலம் அறிமுகமானார்.

மேலும் இவர் நடிப்பில் சமீபத்தில் தாகட்' என்னம் திரைப்படம் வெளியாகியது. 90 கோடி பொருட் செலவில் எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் மோசமான விமர்சனங்களைப் பெற்று வருவதோடு ரூ. 5 கோடி கூட வசூல் செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து இழந்த மார்க்கெட்டை மீட்டெடுக்க நடிகை கங்கனா அடுத்தாக புதிய படம் ஒன்றை இயக்கி, நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் இந்திய முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை 'எமர்ஜென்சி' என்ற பெயரில் உருவாக்க கங்கனா திட்டமிட்டுள்ளாராம்.

இந்நிலையில் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ், "நடிகை கங்கனாவை சந்தித்ததில் மகிழ்ச்சி. அவரின் கனவு படத்தில் பணிபுரிய ஆவலாக இருக்கிறேன்" என்று தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். ஆனால் அந்த பதிவில் எந்த படத்தில் பணிபுரிய போகிறார் என்ற அறிவிப்பை வெளியிடவில்லை.

ஒருவேளை எமர்ஜென்சி என்ற பெயரில் கங்கனா இயக்கி நடிக்கும் படத்தில் ஜி.வி பிரகாஷ் பணியாற்றுவாரா அல்லது வேறு ஏதேனும் புதிய படமாக இருக்குமா என்று ரசிகர்கள் யூகித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement