• Sep 20 2024

“வலியை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி!” நடிகை சமந்தாவின் அட்டகாசமான வைரல் புகைப்படம் இதோ!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து வருபவர்நடிகை சமந்தா. ஃபிட்னஸ் மீது அதிக ஆர்வம் கொண்டிருக்கும் சமந்தா நடு இரவோ அல்லது சுற்றுலாவோ உடற்பயிற்சிக்கு மட்டும் லீவு விடுவதே கிடையாது.

தான் ஒர்க் அவுட் செய்யும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரும் சமந்தா வழக்கம். அந்த வகையில் தற்போதும் அவர் தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரி பக்கத்தில் தான் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ, நாயுடன் விளையாடுவது, ஐஸ்கீரிம் சாப்பிடுவது உள்ளிட்ட புகைப்படங்களை பகிர்ந்து “ வலியை பகிர்ந்து கொள்வதில் எப்போதும் மகிழ்ச்சியே’ என்று குறிப்பிட்டு இருக்கிறார். 

அத்துடன் போன் பூத்தில் நின்று கொண்டு ‘நம்பிக்கைக்கு கால் செய்கிறேன்’ என்று குறிப்பிட்டும் புகைப்படம் ஒன்றை ஷேர் சமந்தா ஷேர் செய்திருக்கிறார். இந்தப்புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தற்போது அவர் விஜய் தேவரகொண்டாவுடன் ‘குஷி’ என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு துருக்கியில் நடந்து வருகிறது. அது தொடர்பான புகைப்படங்களை அண்மையில் சமந்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார். இந்தத்திரைப்படம் செப்டம்பர் 2023 அன்று வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement