• Sep 20 2024

சில்க் ஸ்மிதா போல உடை அணிந்து கிளாமர் போஸ் கொடுத்த பிக்பாஸ் பிரபலம்- வைரலாகி வரும் புகைப்படம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 80களில் கவர்ச்சி நடிகையாக இருந்து தனக்கென ஓர் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய நடிகை தான் சில்க் ஸ்மிதா. இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஆகிய மொழிப் படங்களில் நடித்திருக்கின்றார்.

இவருடைய கவர்ச்சி நடனத்திற்கு மயங்காதவர்களே இல்லை எனலாம். இவரைத் தொடர்ந்தே தற்பொழுது உள்ள நடிகைகள் கவர்ச்சி காட்டுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இவ்வாறு முன்னணி நடிகையாக கொடி கட்டிப் பறந்த இவர் பல ஆண்டுகளுக்கு முதல் தற்கொலை செய்து கொண்டார். இவரது இறப்பிற்கான சரியான காரணம் இன்னும் அறியப்படவில்லை என்றாலும் பிரபலங்கள் பலரும் தமக்கு தெரிந்த விடயங்களை தற்பொழுதும் கூறி வருகின்றனர்.

அத்தோடு கவர்ச்சி என்றாலே எல்லோருக்கும் முதலில் சில்க் ஸ்மிதா பெயர் தான் நினைவுக்கு வரும் எனலாம். இந்த நிலையில் தற்போது பிக் பாஸ் சீசன் 2 இல் பங்குபற்றிய காஜல் பசுபதி சில்க் ஸ்மிதா போல உடை அணிந்து கிளாமர் போஸ் கொடுத்து இருக்கிறார்.

"என் தலைவி (சில்க்) மாதிரி எவளும் வர முடியாது. இருந்தாலும் தலைவிக்காக தலைவி போஸ் try பண்றது தப்பு இல்லை" என குறிப்பிட்டு அந்த போட்டோவை வெளியிட்டு உள்ளார். இந்தப் புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருவதைக் காணலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement