• Sep 21 2024

பொன்னியின் செல்வன் படக்குழு வெளியிட்ட கிளிம்ப்ஸ் வீடியோ

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

புகழ்பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாக உருவாகியுள்ள திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். இப்படத்தை இயக்குநரான மணிரத்தினம் இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின் ஆகியோர் நடிக்கிறார்கள்.

சமீபத்தில் படத்தின் போஸ்டர்கள் & டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஆதித்ய கரிகாலனாக விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், ராஜ ராஜ சோழனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர்.

இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகின.

மேலும், இப்படத்தின் முதல் பாடல் இன்று மாலை வெளியாகவுள்ளது. இந்நிலையில், பொன்னி நதி பாடலின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement