• Sep 20 2024

'சைலண்டாக கீழே சென்று உட்கார்ந்துகொள்கிறேன்'- மீம்ஸ் கிரியேட்டர்களிடம் சிக்கி தவிக்கும் நெல்சன்

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் நிகழ்ச்சி இயக்குநராக இருந்து நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா என்னும் திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் இயக்குநராக அறிமுகமாகியவர் தான் நெல்சன் திலீப் குமார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

அந்த வகையில் இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் என்னும் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் ரசிகர்கள் எதிர்பார்த்ததை விட சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.

இதன் மூலம் தளபதி விஜய்யை இயக்கும் வாய்ப்பு பீஸ்ட் படம் மூலமாக கிடைத்தது. இருப்பினும் ஏப்ரல் 13ம் தேதி படம் ரிலீஸ் ஆன பீஸ்ட் திரைப்படம் தோல்வியைச் சந்தித்ததோடு கடுமையான விமர்சனங்களையும் பெற்றது.

இதனால் பல நெட்டிசன்கள் இவரை வைத்து ட்ரோல் செய்த வருகின்றனர். இந்நிலையில் நெல்சன் சமீபத்தில் ஒரு விருது விழாவுக்கு சென்று இருக்கிறார். அப்போது அவரை மேடைக்கு அழைத்து டான்ஸ் ஆட சொன்னார் பூஜா ஹெக்டே. அதற்கு நெல்சன் முடியாது என மறுத்துவிட்டார்.

"நான் ஆல்ரெடி மாட்டிட்டு இருக்கேன், சைலண்டாக கீழே சென்று உட்கார்ந்துகொள்கிறேன்" என கூறினார் .நெட்டிசன்கள் மற்றும் மீம்ஸ் கிரியேட்டர்களிடம் சிக்கிக்கொண்டு தினம்தோறும் ட்ரோல்களை சந்திப்பது பற்றித்தான் நெல்சன் இப்படி கூறி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement