• Nov 17 2024

“போ போ பொழப்பப் பாரு..” துணிவு -வாரிசு குறித்து ப்ளூ சட்டை மாறன் ட்வீட்!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

 நடிகர்கள் விஜய் மற்றும் அஜித்தின் வாரிசு மற்றும் துணிவு படங்கள் இன்றைய தினம் திரையரங்குகளில் பிரமாண்டமாக  ரிலீசாகியுள்ளன.மேலும் இந்தப் படத்தின் ரிலீசையொட்டி கடந்த சில மாதங்களாக விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களிலும் பொது வெளிகளிலும் அதிகமான ஆர்வத்தை காட்டினர்.இதனிடையே இன்றைய தினம் இந்தப் படங்கள் வெளியாகியுள்ளதையடுத்து அந்தப் பரபரப்புகளுக்கு ஓய்வு கிடைத்துள்ளது என்று தான் கூற வேண்டும்.

பொங்கலையொட்டி இவர்களின் படங்கள் ஒரே நேரத்தில் இன்றைய தினம் ரிலீசாகியதையடுத்து ரசிகர்களிடையே தீ பற்றியது.அத்தோடு 8 ஆண்டுகளுக்கு பின்னர் அஜித் மற்றும் விஜய்யின் படங்கள் ஒரே நேரத்தில் திரையரங்குகளில் ரிலீசாகின.

மேலும் இந்த இரு படங்களும் பொங்கலையொட்டி ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டதில் இருந்து அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் படத்திற்கான தங்களது எதிர்பார்ப்புகளை தொடர்ந்து சமூக வலைதளங்களிலும் பொது வெளியிலும் பதிவு செய்தனர். இந்த இரு படங்களில் எந்தப் படம் சிறப்பாக அமையும் என்று பட்டிமன்றம் வைக்காத குறைதான்.



இவ்வாறுஇருக்கையில்  இன்றைய தினம் வெளியாகியுள்ள துணிவு மற்றும் வாரிசு படங்கள் இரண்டுமே சமமான அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளன. முன்னதாக இரு படங்களின் பிரமோஷன்களும் சிறப்பாக நடைபெற்றன. இரண்டு படங்களின் ட்ரெயிலர், பாடல்கள் உள்ளிட்டவை வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற செய்தன.

இரண்டு படங்களின் பிரமோஷன்களையொட்டி படக்குழுவினர் தங்களது பேட்டிகளை தொடர்ந்து கொடுத்து வந்தனர்.அத்தோடு  வாரிசு படத்தின் இசை வெளியீடு பிரம்மாண்டமான அளவில் நடத்தப்பட்டு படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற செய்தது. இதனிடையே இன்றைய தினம் வெளியாகியுள்ள இந்தப் படங்களில் இரண்டு ஹீரோக்களும் தங்களது ரசிகர்களை ஏமாற்றாமல் படங்களை கொடுத்துள்ளனர்.



மேலும் இந்த இரு படங்கள் குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பேசியுள்ள விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், கடந்த மூன்று மாதங்களாக வாரிசு, துணிவு என ஒரே கூச்சல் என்று கமெண்ட் செய்துள்ளார். இன்று இந்த இரு படங்களும் ரிலீசாகியுள்ள நிலையில், இன்றுடன் எல்லாம் முடிந்தது என்று கூறியுள்ளார். மேலும் வடிவேலு படத்தின் புகைப்படத்தை பதிவு செய்துள்ள அவர், கூட்டம் போடாத, போ போ பொழப்ப பாரு என்றும் வடிவேலு பாணியில் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement