தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து வருபவர் தான் நடிகை கௌரி கிஷன்.இவர் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 96 திரைப்படத்தில் ஜானு என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபல்யமானார்.
இவர் இதற்கு முதல் கடந்த 2019ம் ஆண்டு மார்கம்களி என்னும் படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமாகினார்.இருப்பினும் 96 திரைப்படமே இவருக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தது.இது விர விஜய்யின் மாஸ்டர் தனுஷின் கர்ணன் ஆகிய படங்களிலும் நடித்திருந்தார்.
கடைசியாக பேப்பர் ராக்கெட் (வெப் சீரிஸ்), "புத்தம் புது காலை விடியாதா", மகிழினி என்ற ஆல்பம் ஆகியவற்றில் தோன்றி இருந்தார்.இந்நிலையில் கௌரி கிஷன், கோவாவில் நண்பர்களுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். மேலும் அங்கு கடற்கரையில் இருந்து நண்பர்களுடன் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. மேலும் இவர் அனுராகம், பிகினிங், ஶ்ரீ தேவி ஷோபன் பாபு ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!