தளபதி விஜய் நடித்துள்ள ’கோட்’ கோட் படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவடையும் நிலையில் இந்த படத்தின் பிசினஸை ஏஜிஎஸ் நிறுவனம் தொடங்கி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதல்கட்டமாக ‘கோட்’ ஓடிடி உரிமை ’லியோ’ படத்தின் அளவுக்கு வியாபாரம் ஆகவில்லை என்றாலும் ஒரு மிகப்பெரிய தொகைக்கு முன்னணி ஓடிடி நிறுவனம் ஒன்றுக்கு வியாபாரம் செய்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனை அடுத்து இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை பிரபல தொலைக்காட்சி நிறுவனங்கள் வாங்க போட்டி போட்ட நிலையில் முன்னணி நிறுவனம் ஒன்று படத்தின் சாட்டிலைட் உரிமையை 50 கோடி ரூபாய்க்கு கேட்டதாகவும் ஆனால் விஜய்க்கு மட்டுமே 200 கோடி சம்பளம் கொடுத்துள்ளதால் இன்னும் அதிகம் வேண்டும் என்று ஏஜிஎஸ் சொன்னபோது 50 கோடிக்கு தான் வேண்டும் என்று கறாராக கேட்டு வாங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.
ஏஜிஎஸ் நிறுவனம் ஒரு சில கோடிகள் நஷ்டம் அடைந்தாலும் பரவாயில்லை என்று அந்த நிறுவனத்திற்கு வேறு வழியில்லாமல் சாட்டிலைட் உரிமையை கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது.
ஓடிடி உரிமை மிகப்பெரிய தொகைக்கு வியாபாரம் ஆகியுள்ள நிலையில் சாட்டிலைட் உரிமை மிகக் குறைந்த விலைக்கு வியாபாரம் ஆகி உள்ளதால் தயாரிப்பு தரப்பு அதிருப்தி அடைந்துள்ளது. இருப்பினும் அடுத்ததாக தமிழ்நாடு ரிலீஸ் உரிமை, வெளிநாட்டு உரிமை ஆகியவற்றில் பெரும் லாபம் பார்க்க வேண்டும் என்ற திட்டத்துடன் இருப்பதாக கூறப்படுகிறது.
Listen News!