• Sep 20 2024

’கோட்’ கிளைமாக்ஸில் ஒரு ஆச்சரியம்.. ‘விக்ரம்’ ரோலக்ஸ் போல் ஒரு கேரக்டரா?

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் நடித்து வரும் ’கோட்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற இருக்கும் நிலையில் இந்த படத்தின் சில தகவல்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக ‘விக்ரம்’ படத்தில் கடைசி ஐந்து நிமிடத்தில் ரோலக்ஸ் என்ற கேரக்டரில் சூர்யா மிரட்டி இருப்பது போல், ’கோட்’ படத்தில் கடைசி நேரத்தில் ஒரு ஆச்சரியம் இருப்பதாகவும் ரசிகர்களுக்கு அது இன்ப அதிர்ச்சியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே ’கோட்’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சி திருவனந்தபுரம் கிரிக்கெட் மைதானத்தில் படமாக்கப்பட்ட நிலையில் கடைசியில் சில காட்சிகளில் தல தோனி வருவார் என்று கூறப்பட்டது. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஏனெனில் திருவனந்தபுரத்தில் படப்பிடிப்பு நடந்த போது தோனி சென்னையில் தான் இருந்தார் என்பதும் அதனால் அவர் திருவனந்தபுரம் படப்பிடிப்பு சென்றிருக்க வாய்ப்பே இல்லை என்றும் கூறப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் கிரீன் மேட்டில் தோனியின் காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டு அது திருவனந்தபுரத்தில் எடுக்கப்பட்டது போல் மாற்றப்படும் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் ’கோட்’ படத்தின் கிளைமாக்ஸில் தோனி இருக்கிறாரோ இல்லையோ தெரியாது, ஆனால் கடைசி ஐந்து நிமிடத்தில் ஒரு இன்ப அதிர்ச்சி கேரக்டர் என்ட்ரி ஆக இருப்பதாகவும் அதுதான் படத்தின் ஹைலைட் என்றும் கூறப்படுகிறது.

இந்த தகவலை பிரபல ஊடகவியலாளர் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த நிலையில் அது என்ன என்பது கூட தனக்கு தெரியும் என்றும், ஆனால் அதை இப்போது வெளியிட தான் விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார். இதை அடுத்து ’கோட்’ பட கிளைமாக்ஸில் ஒரு தரமான சம்பவத்தை வெங்கட் பிரபு செய்திருக்கிறார் என்பது தெரிய வருகிறது.

Advertisement

Advertisement