• Sep 20 2024

படப்பிடிப்புக்காக வெளிநாட்டுக்குச் செல்லும் புகழ்- ஹீரோவான முதல் படத்திலேயே கிடைத்த சூப்பர் அதிஷ்டம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகும் ரியாலிட்ரி ஷோவான குக்வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபல்யமானவர் புகழ். இவர் இந்த நிகழ்ச்சியில் இரண்டு சீசன்களிலும் கோமாளியாகப் பங்கு பற்றி ஏராளமான ரசிகர் பட்டாளத்தை சேர்த்துக் கொண்டதோடு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்று வருகின்றார்.

அந்த வகையில் அண்மையில் அஜித் நடிப்பில் வெளியாகியிருந்த வலிமை திரைப்படத்திலும் காமெடியனாக நடித்திருந்தார். இதனைத்தொடர்ந்து தற்போது அவர் ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படத்திற்கு ’மிஸ்டர் ஜூ கீப்பர்’ (Mr Zoo Keeper) என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு மார்ச் 20 முதல் ஊட்டியில் நடைபெற்று வருகிறது. அங்கு ஒரே கட்டமாக பெரும்பாலான காட்சிகளை படமாக்கி விட்டனர் படக்குழுவினர்.

இந்நிலையில் இன்னும் சில காட்சிகளை மட்டும் வெளிநாட்டில் படமாக்க உள்ளனராம். இதற்காக இப்போது படத்தின் இயக்குனர் ஜே சுரேஷ் பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு புறப்பட்டுவிட்டார். விரைவில் புகழ் சென்று அந்த படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என தகவல் வெளியாகியுள்ளதும் முக்கியமாகும்.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement