எதிர் நீச்சல் சீரியல் இயக்குநர் திருச்செல்வம் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
சன் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று 'எதிர்நீச்சல்'. நடிகை தேவயானி நடிப்பில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற 'கோலங்கள்' மெகாத்தொடரை இயக்கிய இயக்குனர் திருச்செல்வம் தான் இந்த 'எதிர்நீச்சல்' தொடரையும் தற்போது இயக்கி வருகிறார்.
மேலும் இந்த தொடரில் நடிகர் மாரிமுத்து, கனிகா, பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா, மதுமிதா, சத்ய பிரியா, பாம்பே ஞானம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.
திங்கள் முதல் சனி வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகும் மெகாதொடரான எதிர் நீச்சல், ஜனனி, குணசேகரன், சக்தி, கதிர், நந்தினி, ஈஸ்வரி, ரேணுகா, ஞானசேகரன் எனும் கதாப்பாத்திரங்களுக்கு இடையேயான கதையாக அமைந்துள்ளது. ஆணாதிக்கம், பெண் உரிமை ஆகியவற்றை மையக் கருவாக கொண்டு இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
இவ்வாறுஇருக்கையில் பிரத்யேக பேட்டி அளித்த இயக்குநர் திருச்செல்வம், "ரசிகர்கள் வரவேற்பைப் பொறுத்து கதாபாத்திரங்களை மாற்றி அமைத்ததுண்டா? அதெல்லாம் உண்மையா?" என்ற கேள்விக்கு, "இதுவரை நான் பண்ணதில்லை. மத்தவங்க பண்ணிருக்கலாம். மேலும் ஒரு கேரக்டர் மிஸ் ஆகுதானு ஒரு கைடன்ஸ் வரும்போது எடுத்துக்குவேன். அத்தோடு இதுவரை அப்படி பண்ணதில்லை.
அதனால் தான் எதிர்நீச்சல் வெற்றிகரமாக வரவேற்பு கிடைக்குதுனு நம்புறேன். கோலங்கள் 400 எபிசோட் அப்ப வந்த அடிக்சன், எதிர்நீச்சல் 150 எபிசோடில் வந்துருச்சு. அதுவும் அமெரிக்காவில் இருந்து அதிக மெசேஜ் வருது. நம்பவே முடியாத அளவுக்கு எதிர்நீச்சல் சீரியல் ரீச் ஆகியுள்ளது. அத்தோடு கோலங்கள் சமயத்தில் வாட்ஸ்அப் இல்லை. இருப்பினும் கடிதங்கள் மூலம் வரும்." என திருச்செல்வம் பதில் அளித்துள்ளார்.
Listen News!