அஜித்தின் அடுத்த படம் ‘குட் பேட் அக்லி’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடந்து வரும் நிலையில் ஜூன் எட்டாம் தேதி வரை இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் முதல் கட்ட படப்பிடிப்பே இன்னும் முடிவடையாத நிலையில் இந்த படத்தின் டிஜிட்டல் உரிமை விற்பனை ஆகிவிட்டதாகவும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் சுமார் 100 கோடி ரூபாய்க்கு இந்த படத்தை வாங்கி இருப்பதாகவும் கூறப்படுவது திரை உலகில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
முதல் முதலாக அஜித் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இணையும் படம், தேவி ஸ்ரீ பிரசாத் இசை, 3 வேடங்களில் அஜித் நடிக்கும் படம், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு கிடைத்த வரவேற்பு ஆகியவை காரணமாகத்தான் நெட்பிளிக்ஸ் நிறுவனம் இந்த படத்தை பெரும்தொகை கொடுத்து வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் சாட்டிலைட் டிவி உரிமை குறித்த வியாபாரமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தமிழில் முன்னணி தொலைக்காட்சி ஒன்று விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் உரிமையை வாங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் படங்களின் அளவுக்கு அஜித் படங்களுக்கு வியாபாரம் இல்லை என்று கூறப்பட்டு வரும் நிலையில் முதல் கட்ட படப்பிடிப்பு முடியும் முன்னரே ‘குட் பேட் அக்லி’ நூறு கோடி ரூபாய் அளவுக்கு பிசினஸ் செய்திருப்பதால் அஜித் ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். இதனை அடுத்து அஜித்தின் சம்பளமும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!