• Sep 20 2024

பிக்பாஸ் ரசிகர்களுக்கு வெளியான மகிழ்ச்சி செய்தி-இதோ வெளியான அறிவிப்பு

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

உலகலாவியரீதியில் ரசிகர்களால் அதிகம் விரும்பிப் பார்க்கப்படும் ரியாலிட்ரி ஷோவாக இருப்பது தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியானது தமிழ், தெலுங்கு, ஹிந்தி ,மலையாளம் ஆகிய மொழிகளில் ஒளிபரப்பப்பட்டு வருகின்றது.தமிழில் இதுவரை 5 சீசன்கள் மட்டும் நிறைவடைந்துள்ளது.

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி முடிவடைந்ததை அடுத்து பிக்பாஸ் அல்டிமேட் என்னும் நிகழ்ச்சி பிரபல ஓடிடி தளத்தில் ஒளிபரப்பானது.

இந்நிலையில் கடந்த ஐந்து சீசன்களின் வெற்றியை தொடர்ந்து ஆறாவது சீசனில் அடியெடுத்து வைக்க இருக்கிறது பிக்பாஸ் நிகழ்ச்சி.

மேலும் சமீபத்தில் கூட கமலின் அதிரடியான விக்ரம் பட பாணி டயலாக் உடன் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களிடத்தே தீயாய் பரவி வருகின்றது.



இந்நிலையில் தற்போது பிக்பாஸ் சீசன் 6 தொடங்கவுள்ள தேதி குறித்து தகவல் வெளியாகி இருக்கிறது. ஆம், பிக்பாஸ் 6 அக்டோபர் 2-ம் தேதி தொடங்கும் என கூறப்படுகிறது.

ஏற்கனவே பிக்பாஸ் 6-ல் கலந்து கொள்ளும் நட்சத்திரங்கள் குறித்து பேசப்பட்டு வருகிறது. அதன்படி ராஜா ராணி சீரியல் நடிகை அர்ச்சனா, தொகுப்பாளினி டிடிமற்றும் விஜய் டிவி ஜாக்குலின் என்போர் கலந்து கொள்வதாக கூறப்படுகின்றது. இது வரை எந்த உத்தியோகபூர்வ தகவல் வெளியாகவில்லை.


Advertisement

Advertisement