• Sep 20 2024

விஜய் கதையில் நடிக்கவுள்ள அஜித்.. AK 62 அறிவிப்பை எதிர்பார்த்துக் காத்திருந்த ரசிகர்களுக்கு கிடைத்த குட் நியூஸ்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சமீபகாலமாக துணிவு, வாரிசு படங்களை பற்றியே அதிகளவில் பேசப்பட்டு வந்திருந்தது. இதனையடுத்து தற்போது ஒருபக்கம் விஜய் மற்றும் லோகேஷ் கூட்டணியில் உருவாகும் லியோ படத்தை பற்றிய பேச்சுக்கள் போய்க்கொண்டிருக்கையில் மறுபக்கம் AK62 சர்ச்சைகள் ஓடிக்கொண்டிருக்கிறது. 


அதாவது விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் AK 62 இல் அஜித் நடிக்கவுள்ளார் என கடந்தாண்டு அறிவிப்பு வந்த நிலையில் தற்போது விக்னேஷ் சிவன் இப்படத்திலிருந்து யாருமே எதிர்பார்க்காத வகையில் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். மேலும் விக்னேஷ் சிவனின் கதையில் அஜித்திற்கு உடன்பாடு இல்லாத காரணத்தால் அவர் நீக்கப்பட்டதாக தகவல் வந்துள்ளது.


இதனைத் தொடர்ந்து AK62 திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்கவுள்ளார் என்பது சமூக வலைத்தளங்கள் மூலமாக உறுதியானாலும் இதனை பற்றிய அதிகாரபூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. விக்னேஷ் சிவனைப் போலவே மகிழ் திருமேனிக்கும் அஜித் பல கண்டிஷன்களை போட்டு வருவதால் தான் AK62 அறிவிப்பு வெளியாக தாமதம் ஏற்படுவதாக பேச்சுக்கள் எழுந்த வண்ணமே இருக்கின்றன.


இந்நிலையில் தற்போது அஜித் ரசிகர்களுக்கு ஒரு ஷாக்கிங் நியூஸ் வெளியாகி இருக்கின்றது. அதாவது மகிழ் திருமேனி விஜய்க்காக உருவாக்கிய கதையை தான் அஜித்திடம் கூறியுள்ளார் என்றும், விஜய்யின் கதையில் தான் தற்போது அஜித் நடிக்கவுள்ளார் என்றும் தகவல்கள் வெளி வருகின்றன. 

ஏற்கெனவே விஜய்யின் 65 ஆவது திரைப்படத்தை மகிழ் திருமேனி தான் இயக்கப்போவதாக ஒரு தகவல் வெளியாகி இருந்தது. மேலும் மகிழ் திருமேனி சொன்ன அந்தக் கதையும் விஜய்க்கு ரொம்பவே மிகவும் பிடித்திருந்தது. ஆனால் ஒரு சில காரணங்களால் அப்படம் நடக்காமல் போனது. 


இதனைத் தொடர்ந்து தற்போது மகிழ் திருமேனி விஜய்க்கு சொன்ன கதையில் சில மாற்றங்களை செய்து அதனை அஜித்திடம் கூறியதாகவும், அக்கதை தான் AK62 திரைப்படமாக உருவாகப் போவதாகவும் பேச்சுக்கள் எழுந்துள்ளன. இருப்பினும் இது உண்மையா இல்லை வெறும் வதந்தியா என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை.

Advertisement

Advertisement