• Sep 20 2024

ரசிகர்களுக்கு கமல் சொன்ன நல்ல செய்தி..அட சூப்பர் அப்டேட் ஆச்சே..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச்செல்ல கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக உழைத்துக்கொண்டிருப்பவர் உலகநாயகன் கமல்ஹாசன். நடிப்பிற்காக எந்த அளவிற்கு வேண்டுமானாலும் ரிஸ்க் எடுக்க தயங்காத நடிகர் தான் இவர்.

நடிகராக மட்டுமல்லாமல் இயக்குநர், பாடகர், பாடலாசிரியர், கதாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகத்திறன் கொண்டவராக திகழும் இவர் மேலும் கடந்த நான்கு ஆண்டுகளாக கமலின் படம் வெளியாகாததால் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் வருத்தத்தில் இருந்தனர். அந்த வருத்தத்தை போக்க தற்போது கமலின் விக்ரம் திரைப்படம் வெளியாகி ஹிட்டடித்துள்ளது.

இவ்வாறுஇருக்கையில் சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட கமல் இந்தியன் 2 படத்தைப்பற்றி பேசியுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்ட இந்தியன் 2 திரைப்படம் சில பல காரணங்களால் கிடப்பில் உள்ளது.

மேலும் ஷங்கர் மற்றும் கமலின் கூட்டணியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியன் 2 திரைப்படம் எப்போது துவங்கப்படும் என்பதுதான் ரசிகர்களின் கேள்வியாக இருந்தது. இந்நிலையில் அதற்கு பதிலளித்த கமல், இந்தியன் 2 திரைப்படம் விரைவில் துவங்கும்.

நானும் ஷங்கரும் அப்படத்தை துவங்க மிகுந்த ஆர்வமாக இருக்கின்றோம். எனவே ஷங்கர் தற்போது இயக்கிக்கொண்டிருக்கும் தெலுங்கு படம் வெளியானதும் உடனடியாக இந்தியன் 2 திரைப்படம் துவங்கப்படும் என்றார் கமல்.

மேலும் இந்த செய்தி கமல் ரசிகர்கள் உட்பட ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement