• Sep 20 2024

ரஜினி ரசிகர்களுக்கு வெளியானது குட் நியூஸ்... முதல் நாளில் 'ஜெயிலர்' படம் இத்தனை கோடி வசூல் செய்யப் போகிறதா..?

Prema / 1 year ago

Advertisement

Listen News!

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், கடைசியாக தளபதி விஜய் நடிப்பில் வெளியான 'பீஸ்ட்' திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற போதிலும், விமர்சனம் ரீதியாக படு தோல்வியை சந்தித்தது. இந்த படத்திற்கு பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து 'ஜெயிலர்' படத்தை தற்போது  இயக்கி முடித்துள்ளார் .


அந்தவகையில் வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன், 'ஜெயிலர்' படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளது. மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெரிப், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி, ரோபோ சங்கர், தமன்னா என பலர் நடித்துள்ளனர்.


இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். தொடர்ந்து  இப்படத்தின் அப்டேட் குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில் தற்போது ஒரு குட் நியூஸ் வெளியாகி இருக்கிறது. அதாவது இப்படம் வெளியாகும் முதல் நாளில் மட்டுமே உலகளவில் ரூ. 70 கோடிக்கும் மேல் வசூல் செய்யும் எனவும்,  அதிலும் குறிப்பாக தமிழகத்தில் மட்டுமே ரூ. 25 கோடி வரை வசூல் செய்யும் எனவும் கூறப்படுகின்றது.


அதுமட்டுமல்லாது அதிகாலை காட்சிகள் திரையிடப்பட்டால்  ரூ. 30 கோடிக்கும் மேல் வசூல் செய்யும் எனவும் தகவல் வெளியாகி இருக்கின்றது. எனவே இப்படம் எதிர்பார்த்தளவிற்கு வசூலினை ஈட்டுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

Advertisement

Advertisement