• Nov 10 2024

தங்கள் குழநடதையின் புகைப்படத்தை வெளியிட்டு குட் நியுஸ்சொன் பிரிய-அட்லீ ஜோடி..குவியும் வாழ்த்துக்கள்...!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநராக திகழ்ந்து வருபவர் தான் இயக்குநர் அட்லீ.இவர் இயக்குநர் ஷங்கரிடம், நண்பன் மற்றும் எந்திரன் ஆகிய இரு படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்து இருக்கிறார். அதை தொடர்ந்து  "ராஜா ராணி" திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

 இவர் திரைப்படம் இயக்குவதற்கு முன்பே இவர் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் "முகப்புத்தகம்" என்னும் குறும்படத்தை இயக்கியுள்ளார். மேலும் முன்னணி நடிகரான விஜய்யை வைத்து தெறி படம் இயக்கி மா பெரும் வெற்றி கொடுத்தார். இப் திரைப்படத்திற்காக விஜய் விருதும் வென்றுள்ளார். 

அதனை தொடர்ந்து இவர் இயக்கி, விஜய் நடித்த மெர்சல் படம் தீபாவளி பண்டிகை அன்று வெளியாகி மா பெரும் வெற்றி பெற்றது. அதுமட்டுமல்லாமல் இயக்குநர் அட்லீ விஜய் ரசிகரும் ஆவார். மேலும் விஜய்யை வைத்து தெறி,மெர்சல்,பிகில் என தொடர் வெற்றி படங்கள் கொடுத்து முன்னணி இயக்குநர் ஆனார்.அத்தோடு பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி வருகின்றார்.

இந்நிலையில் இயக்குநர் அட்லீ கடந்த 2014 ஆம் ஆண்டு துணை நடிகை ப்ரியா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இவ்வாறு இருக்கையில் இவர்களுக்கு குழந்தை பிறந்த நிலையில் அவர்களின் குழந்தை புகைப்படத்தை வெளியிட்டு அந்த குழந்தைக்கு என்ன பெயர் வைத்துள்ளார்கள் என்பதை ரசிகர்களுக்கு தெரிவித்து உள்ளார்கள்.அதாவது அந்த குழந்தைக்கு  “ MEER ” என பெயர் வைத்துள்ளனர்.இதற்கு ரசிகர்கள் பலரும் தமது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.



Advertisement

Advertisement