தமிழ் திரையுலகில் முற்போக்கு கருத்துக்களை உடைய பாடல்களை எழுதி வருபவர் தான் கபிலன்.இவர் உன் சமையலறையில் என்னும் பாடல் மூலம் பாடலாசிரியராக அறிமுகமாகினார். இதனைத் தொடர்ந்து இதுவரை 100க்கு மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார்.
இவரைப் போலவே இவருடைய மகளான தூரிகையும் முற்போக்கு சிந்தனை பெண்ணியவாதியாக வளர்ந்து வந்தார்.முற்போக்கு இயக்க தலைவர்கள், திராவிட இயக்க தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார். முன்னணி இதழ் ஒன்றில் தொடர்ந்து கட்டுரை எழுதி வந்த தூரிகை தந்தையைப்போலவே சினிமா பக்கமும் தொடர்பில் இருந்துள்ளார்.
தொடர்ந்து கடந்த 2020 ஆம் ஆண்டு பீயிங் வுமன் என்கிற பெண்களுக்கான டிஜிட்டல் இதழை தொடங்கி நடத்தி வந்துள்ளார். இதில் பெண்களுக்கான ஆக்கபூர்வ பிரச்சினைகள் குறித்து பேட்டிகள் எடுத்து பதிவிட்டு வந்துள்ளார். கடைசியாக கடந்த 1 ஆம் தேதி மெரினாவில் பாலின சமத்துவம் குறித்த நிகழ்வில் கலந்துக்கொண்டு அதை தனது டிஜிட்டல் இதழில் பதிவிட்டுள்ளார்.
பெண்கள் முன்னேற்றம் குறித்து தனது முகநூலில் பல இடங்களில் குறிப்பிட்டுள்ள தூரிகை, விக்ரம் படத்தில் நடித்த டீனா பெரும் பாராட்டைப் பெற்றது சமூக வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து தனது முகநூலில் தூரிகை புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்தியுள்ளார். அவரது பதிவில் "நீங்கள் இன்று நம்பிக்கையற்றவர்களாக உணர்ந்தால், இந்தப் படங்களைப் பார்த்து, நமது காத்திருப்புக்கும் பலன் இருப்பதை நம்புங்கள், நிச்சயமற்ற தன்மையைத் ஆரத்தழுவி அதன் அழகை அனுபவிக்கவும், நல்ல காரியங்கள் நடக்க எப்போதும் நேரம் எடுக்கும். ஹாட்ஸ் ஆஃப் நடிகை வசந்தி" என வாழ்த்தியுள்ளார்.
வாழ்க்கையில் முற்போக்கான பல விஷயங்களை பேசியும் எழுதியும் வந்த ஒரு பெண். பெண்களின் உரிமைகளுக்காக சிந்தித்த பெண். நல்ல விஷயங்கள் நடக்க நேரம் எடுக்கும், அந்த காத்திருப்பை ரசியுங்கள் என பதிவிட்டவர், எதைக்கண்டு இனி முடியாது என வாழ்க்கையை முடித்துக்கொண்டார் என ரசிகர்கள் கேட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!