• Nov 10 2024

நல்ல படைப்புகள் மொழிகளை கடந்தும் வெல்லும் - ஜெய்பீம் படத்தைப் பார்த்து கண்ணீர் விட்டு அழுத சீனர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் நீதியரசர் சந்துருவின் வாழ்க்கையில் அவர் வாதிட்ட ஒரு முக்கியமான வழக்கை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம் தான் ஜெய்பீம்.இப்படத்தில் சூர்யா சந்துருவாக நடித்து அசத்தியிருந்ததோடு இந்தப் படம் 5 தேசிய விருதுகளையும் பெற்றது.

அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய பாராட்டுக்களை அள்ளியது. அத்தோடு இப்படம் குறிப்பிட்ட சமுதாயத்தை அவமானப்படுத்துவதாக சூர்யாவுக்கும் ஞானவேலுக்கம் எதிராக பல குற்றங்கள் சாடப்பட்டது. ஆனால், சமீபத்தில் அந்த வழக்குகளை நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டன. 


 சீனாவில் நடைபெற்று வரும் 12வது சர்வதேச பெய்ஜிங் திரைப்பட விழாவில் வழங்கப்படும் டியாண்டன் விருதுக்கு சூர்யாவின் ஜெய்பீம் விருது தேர்வு செய்யப்பட்டுள்ள அறிவிப்பும் சமீபத்தில் வெளியாகி சூர்யா ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், அந்த விருது விழாவில் ஜெய்பீம் பிரத்யேகமாக தியேட்டரில் திரையிடப்பட்டது.


மொழிகளை கடந்து சீனர்களையும் ஜெய்பீம் உலுக்கி எடுத்துள்ளது. மணிகண்டன் சிறையில் போலீஸாரால் அடித்து துன்புறுத்தப்படும் ஜெய்பீம் படக் காட்சியை பார்த்து சீனர்கள் கண்ணீர் சிந்தும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. நல்ல படைப்புகள் மொழிகளை கடந்து வெல்லும் என்பதற்கு ஜெய்பீம் திரைப்படம் ஒரு சிறந்த உதாரணமாக மாறி உள்ளது.



Advertisement

Advertisement