இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்த வாத்தி திரைப்படம் திரையரங்கில் பிப்ரவரி 17ந் தேதி வெளியானது. தமிழ், தெலுங்கு என மொழியில் வெளியான இப்படத்திற்கு தமிழில் வாத்தி என்றும்,தெலுங்கில் சார் என்றும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
கல்வி வியாபாரமாகி வருவதை மையக்கருவாக வைத்து படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இதில் தனுஷ் வாத்தியாராக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக சம்யுக்தாவும், வில்லனாக சமுத்திரக்கனியும் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷின் இசையில் பாடல்கள் அனைத்தும் படம் வெளியாவதற்கு முன்பே மிகப்பெரிய அளவில் ஹிட்டாகின.
வாத்தி படம் முதல் நாளில் ரூ.14 கோடி, இரண்டாம் நாளில் ரூ.20 கோடியை வசூலித்ததாக கூறப்பட்ட நிலையில், எட்டாம் நாளான இன்று உலகம் முழுவதும் ரூ75 கோடியை வசூலித்துள்ளது. இந்த மகிழ்ச்சியான தகவலை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
வாத்தி படத்தை தொடர்ந்து அருண் மாதீஸ்வரன் இயக்கத்தில் தனுஷின் வித்யாசமான நடிப்பில் கேப்டன் மில்லர் திரைப்படம் உருவாகி வருகிறது. 1930 சுதந்திர காலக்கட்டத்தில் நடக்கும் கதை அம்சத்தை கொண்ட இப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி, ஆகிய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாக உள்ளது. கேப்டன் மில்லர் படத்தை ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை வைத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!