• Sep 20 2024

கான்டீனில் அமிர்தாவைக் கடுப்பாக்கிய ராதிகா- பழனிச்சாமி முன்னாடி பாக்கியாவை அவமானப்படுத்தி பேசிய கோபி- Baakiyalakshmi Serial

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞசம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடைபெறவுள்ளது என்று பார்ப்போம்.

கான்டீனுக்கு வரும் ராதிகா பாக்கியா எங்கே என்று கேட்கின்றார். அப்போது அமிர்தா அம்மா இன்டைக்கு வரமாட்டாங்க என்ன என்று சொல்லுங்க நான் பார்த்துக் கொள்கின்றேன் என்று சொல்கின்றார். அப்போது ராதிகா நாளை மறுதினம் ஆப்பீஸ்ல ஒரு பங்சன் இருக்கு 70,80 பேருக்கு சமைக்க வேண்டியிருக்கும் இதில இருக்கிற ஐட்டம்களைத் தான் சமைக்கனும் என்று மெனுவைக் கொடுக்கின்றார்.


அத்தோடு டைமுக்கு சாப்பாடு வந்திடனும் என்று சொல்ல அமிர்தா, அதெல்லாம் வந்திடும் நீங்க கவலைப்படாமல் போங்க என்று சொல்லி அனுப்பி வைக்கின்றார். தொடர்ந்து வீட்டில் பாக்கியா களைப்பாக இருக்க ராமமூர்த்தியும் ஈஸ்வரியும் எழிலும் பாக்கியாவை ட்ரெஸ்ட் எடுக்கச் சொல்கின்றனர். காலேஜையும் பார்த்து கான்டீனையும் பார்க்க முடியுமா என்று கேட்கின்றனர்.

அப்போது பாக்கியா அவர்களை சமாளித்து விட்டு எழும்பிச் சென்று கிச்சனில் வேலை பார்க்கின்றார். அப்போது அமிர்தாவும் செல்வியும் வர கான்டீனில் நடந்தது  பற்றி கேட்க ஆடர் இருக்கும் விஷயத்தை பாக்கியா சொல்கின்றார்.இதனால் பாக்கியா ஆடர் சமையல் சமைக்க நானும் வருகிறேன் என்று சொல்கின்றார்.

பின்னர் விடிந்ததும் பாக்கியா சீக்கிரமாக எழுந்து வேலைகளைச் செய்கின்றார்.அப்போது அமிர்தா வந்து கேட்க பாக்கியா அதெல்லாம் வேணாம் நானே பார்த்துக் கொள்கின்றேன் என்று தனியாக அனைத்து வேலைகளையும் செய்து முடிக்கின்றார். அதன் பின்னர் இங்கிலீஸ் கிளாசிற்குச் சென்ற பாக்கியா பழனிச்சாமியுடன் சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து கோபி கோபப்படுகின்றார்.


இந்த நேரம் கோபியும் படிக்க வந்திருப்பதாக நினைத்து ஒருவர் மேனேஜரிடம் கொண்டு போய் விட கோபி தனக்கு ஆங்கிலம் தெரியும் சும்மா வந்ததாக சொல்லி சமாளித்து விட்டு அங்கிருந்து கிளம்பி விடுகின்றார். வரும் போது இடையில் பழனிச்சாமியுடன் பாக்கியாவைப் பார்த்து ஏதோ கண்ணகி மாதிரி நடிப்ப இங்க வந்து இப்பிடி இருக்கிற எனத் திட்டுகின்றார். அப்போது பாக்கியா கோபப்படுகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement