• Sep 20 2024

பாக்கியாவை கட்டிப் பிடித்து கொஞ்சி விளையாடும் கோபி- வீடியோ எடுத்து ரசிக்கும் இனியா- தீயாய்ப் பரவி வரும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் பலதரப்பட்ட ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது. காரணம் இந்த சீரியலில் கணவர் தன்னை விட்டு பிரிந்து போனாலும் ஒரு பெண் தன்னுடைய சுய கௌரவத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக பல போராட்டங்களையும் அவமானங்களையும் தாண்டி அடுத்தடுத்து சாதித்துக் கொண்டே இருக்கிறார்.

பெண் என்றால் வீட்டிற்குள்ளே சமைத்துக் கொண்டு இருக்க வேண்டும் என்று இல்லை தனக்கு இருக்கும் திறமையால் பலபேரை வாழவைக்கலாம் என்று எடுத்துக்காட்டாக பாக்கியலட்சுமி வாழ்ந்து வருவதாலே பல ரசிகர்கள் இந்த சீரியலுக்கு தொடர்ச்சியாக ஆதரவு கொடுத்து வருகின்றனர்.


அதிலும் பாக்கியா காரெக்டரில் நடித்து வரும் சுசித்ராவுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே காணப்படுகின்றது. இந்த சீரியன் கதைப்படி இனியா பிளஸ் 2 பரீட்சையில் நல்ல பெறுபேற்றை பெற்று விட்டார். இதனால் கோபி தான் சொல்வதைத் தான் இனியா படிக்க வேண்டும் என்று கூறுகின்றார்.

இதனால் இனியா தனக்கு பிடித்த விஸ்காம் படிப்பாரா அல்லது கோபி சொல்வதைத் தான் படிப்பாரா? என்ன முடிவெடுப்பார். அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர்.இப்படியான நிலையில் தற்பொழுது ஒரு வீடியோவை சுசித்ரா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதில் இனியா ஹாஸ்பிட்டலில் இருக்கின்றார். இப்போது கோபி பாக்கியாவை கட்டிப் பிடித்து பேசிக் கொண்டிருக்கின்றார். பின்னர் பாக்கியா கோபியை அடித்து விளையாடுகின்றார்.இவ்வாறாக மூவரும் சிரித்துப் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருவதைக் காணலாம்.



Advertisement

Advertisement