• Nov 19 2024

பதற்றத்தில் இருக்கும் பாக்கியாவை ஆறுதல்ப்படுத்திய பழனிச்சாமி- பழனியைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்த கோபி

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

கல்யாண வீட்டிற்கு சமைக்க வந்த பாக்கியா ரொம்ப பதற்றமாகவே இருக்கின்றார். இதைப் பார்த்த பழனிச்சாமி எதற்கு பதற்றமாக இருக்கிறீங்க என்று கேட்ட போது, பாக்கியா நான் நிறைய ஆடர் எடுத்திருக்கிறேன். ஆனால் இந்த ஆடர் மாதிரி இல்லையே இது ரொம்ப பெரிய ஆடர் என்று சொல்ல பழனிச்சாமி பதற்றப்படாமல் இருக்க ஆறுதல் கூறுகின்றார்.


அத்தோடு நான் எப்போதும் எஉங்க கூட தான் இருப்பேன் கவலைப்படாம இருங்க என்று பாக்கியாவை அனுப்பி வைக்கின்றார். தொடர்ந்து கோபியும் ராதிகாவும் கல்யாணத்திற்காக வந்து கொண்டிருக்கின்றனர்.அப்போது ராதிகா இப்போ கல்யாணம் பண்ணப்போற பையன் குடும்பத்தை சின்ன வயசில இருந்து தெரியும்.மயூவுக்கு எக்ஸ்ஷாம் இல்லாட்டி அம்மாவையும் மயூவையும் கூட கூட்டிட்டு வந்திருப்பேன்.

அப்போது கோபி கல்யாணத்தை எதுக்கு இவ்வளவு துாரம் வைக்கிறாங்க எனக் கேட்ட ராதிகா பொண்ணு வீடு ரொம்ப பெரிய இடம் அதான் இங்க வைக்கிறாங்க என்று இருவரும் பேசிக் கொண்டே கல்யாண வீட்டுக்கு வருகின்றனர். அங்கே தனியாக ரூம் கொடுக்க இருவரும் சந்தோஷத்தில் இருக்கின்றனர்.


தொடர்ந்து சமையல் செய்ய பாக்கியாவும் அவரது உதவியாளர்களும் ஆரம்பிக்கின்றனர். அப்போது செல்வி தன்னுடைய திருமணம் எப்படி நடந்தது என்று கூறி எல்லோரையும் சிரிக்க வைக்கின்றார். தொடர்ந்து பழனிச்சாமியும் அவரது நண்பர் சுதாகரும் பேசிட்டு இருக்கின்றனர். அப்போது பழனிச்சாமி பாக்கியா வீட்டில் தான் பொண்ணு பார்க்க போன விஷயத்தையும் கூறுகின்றார்.

இதனைச் சொல்லி இருவரும் சிரித்துக் கொண்டிருக்கும் போது அந்த வழியாக வந்த கோபி பழனிச்சாமியைக் கண்டதோடு பழனிச்சாமியிடம் பேசுவதற்காக போய் நிற்கின்றார்.கோபியைக் கண்ட பழனிச்சாமி நீங்க பொண்ணு சைட்டா பையன் சைட்டா என்று கேட்க, அவர் பையன் சைட் என்று சொல்ல தான் பொண்ணு சைட் என்று சொல்லி பேசிட்டு இருக்கும் போது கோபி அங்கிருந்து கிளம்புகின்றார். கோபி போனதைத் தொடர்ந்து கோபி யார் என்பதை சுதாகரிடம் பழனிச்சாமி சொல்கின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement