• Sep 20 2024

தாடியுடன் அலையும் கோபி... பாக்கியாவிற்கு திருமணம் என்ற கவலையில் தேவதாஸாகவே மாறிட்டாரே..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ஹிட் சீரியல்களில் ஒன்றுதான் 'பாக்கியலட்சுமி'. இந்த சீரியலில் பாக்கியலட்சுமி கதாபாத்திரத்தில் நடிகை சுசித்ராவும், கோபி கதாபாத்திரத்தில் நடிகர் சதீஷும் நடித்து வருகின்றனர்.


அந்தவகையில் இந்த சீரியலில் மிகப்பெரிய தூணாக விளங்கி வருபவர் கோபி தான். இதற்கு முன்னர் இவர் பல்வேறு சீரியல்களில் நடித்து இருந்தாலும் இவருக்கு பெயரையும் புகழையும் சேர்த்தது 'பாக்கியலட்சுமி' சீரியலில் இவர் நடித்த கோபி கதாபாத்திரம் தான்.


இந்த சீரியலின் கதைப்படி தற்போது பாக்கியாவிற்கு இரண்டாவது திருமணம் நடக்க போவது என கோபி நினைத்து கொண்டிருக்கிறார். 


இந்நிலையில் கோபியின் சமீபத்தியப் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகின்றது. அதில் அவர் தாடி, மீசையுடன் இருக்கின்றார். இதனைப் பார்த்த ரசிகர்கள் "பாக்கியாவிற்கு திருமணம் என்பதால் தான் இந்தப் பரிதாப நிலையா..?" எனக் கமெண்டுகள் மூலமாக கேட்டு வருகின்றனர்.


Advertisement

Advertisement