விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் பழனிச்சாமிக்கும் பாக்கியாவிற்கும் திருமணம் நடைபெறப்போவதாக நினைத்துக் கோபி குழப்பி போயுள்ளார்.
இதனைத் தொடர்ந்து இனி வரும் நாட்களில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. அதில் பழனிச்சாமியைத் தேடி கோபி கோபத்துடன் நேரடியாக அவரின் வீட்டிற்கே செல்கின்றார்.
அங்கு சென்று "நீங்க எதுக்கு அடிக்கடி என்னோட மனைவியை மீட் பண்ணிப் பேசுறீங்க" எனக் கேட்கின்றார். அதற்கு பழனிச்சாமி "நான் தான் உங்க மனைவியைப் பார்த்ததே இல்லையே" என நக்கலாக கூறுகின்றார். பதிலுக்கு கோபி "சூப்பர் மார்க்கெட்டில் கொஞ்சிப் பேசுறது, சிரிக்கிறது, டியூசன் கிளாசில் லூட்டி அடிக்கிறது, இதை எல்லாத்தையுமே இத்தோட நிறுத்திக்கோ, புரியுதா இல்லையா" எனக் கேட்கின்றார்.
அதற்கு பழனிச்சாமி "அது எங்களுக்குள்ள இருக்கிற பெர்ஷனல், அதனால் நீங்க உங்க வேலையே மட்டும் பாருங்க" எனக் கூறுகின்றார். இதனைக் கேட்டதும் கோபி அதிர்ச்சியில் ஆடிப் போகின்றார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது.
Listen News!