• Sep 20 2024

இனியாவை மிரட்டும் கோபி... கோபத்தில் கத்தும் பாக்கியா... இனி நடக்கப் போவது என்ன..? விறுவிறுப்பான 'பாக்கியலட்சுமி' ப்ரோமோ வீடியோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சூப்பர் ஹிட் சீரியல் தான் 'பாக்கியலட்சுமி'. இந்த சீரியலில் அடிக்கடி அதிரடித் திருப்பங்கள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன.  


இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் கோபி கையில்  அப்பிளிகேஷன் போமுடன் பரப்பாக வீட்டிற்கு ஓடி வருகின்றார். இனியாவிடம் சென்னையில் நம்பர் ஒன் காலேஜ்ஜில் உனக்கு பிபிஎம் படிக்க அப்ளிகேஷன் ஃபோம் வாங்கியிருக்கிறேன் எனக் கூறிக் கொடுக்கின்றார்.


அதற்கு எழில் கோபியிடம் "இங்க பாருங்க இனியா விஸ்கோம் தான் படிக்க போறா" எனக் கோபமாக கூறுகின்றார். அதற்கான போமையும் காட்டுகின்றார். அதனைப் பார்த்த கோபி யாரை கேட்டு இதெல்லாம் வாங்கிட்டு வந்தீங்க எனக்கூறித் திட்டுகின்றார்.


கோபி இனியாவிடம் பிபிஎம் படிக்குமாறு எவ்வளவு சொல்லியும் இனியா சம்மதிக்கவில்லை. அதற்கு உடனே பாக்கியா "என்ன படிக்கணும் என்று அதுதான் இனியா முடிவு பண்ணிட்டாளெல்லோ" என கோபியிடம் கூறுகின்றார். பதிலிற்கு கோபி இனியா நான் சொல்லுற கோஸ் தான் படிக்கணும் என மிரட்டுகின்றார். 

அதற்கு பாக்கியா "யார் சொல்லியும் இனியா கேட்க மாட்டா, அவளுக்கு என்ன பிடிக்குமோ அதைத்தான் அவ படிப்பாள்" எனக் கூறி மறுத்துப் பேசுகின்றார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது. 

 

Advertisement

Advertisement