• Nov 19 2024

பாக்கியாவை தன் குடும்பத்திலிருந்து பிரித்துக் காட்டுவேன் என்று சபதம் போட்ட கோபி- திடீரென வீட்டை விட்டு கிளம்பிய ஈஸ்வரி

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடைபெறவுள்ளது என்று பார்ப்போம்.

பாக்கியா வீட்டை விட்டு துரத்தியதால் ஓவராகக் குடித்திருக்கும் கோபி பாக்கியாவைதத் தன்னுடைய குடும்பத்திலிருந்து பிரிக்காமல் விடமாட்டேன் என்று தன்னுடைய நண்பரிடம் சவால் விடுகின்றார்.பின்னர் கார் எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வரும் கோபி தான் வர முதலே கதவைப் பூட்டிட்டாங்க என்று வாசலில் நின்று புலம்புகின்றார்.


பின்னர் பாக்கியலட்சுமி என்று போட்டை பார்த்ததும் உள்ளே போனால் கூட்டமா சேர்ந்து அடிச்சாலும் அடிப்பாங்க என ராதிகா வீட்டுக்கு போகலாம் என்று தள்ளாடித் தள்ளாடி கிளம்புகின்றார். அங்கே போனதும் ராதிகாவின் அம்மா வந்து கதவைத் திறக்க மாறி வந்து கதவைத் திறந்திட்டேன் என்கிறார்.

ராதிகாவின் அம்மாவை அடையாளம் தெரியாமல் மேடம் என்று பேசுகின்றார். அவர் ராதிகாவைக் கூப்பிட ராதிகா எதுக்கு இங்க வந்தா என்று யோசிக்கின்றார். பின்னர் ராதிகாவைக் கண்டதும் பயந்த கோபியை ராதிகா வந்து திட்டுகின்றார். எதுக்காக குடிச்சீங்க கோபி என்று கேட்ட போது பாக்கியா என்னுடைய வீட்டிலிருந்து என்னை துரத்தி விட்டாள் அதனால் தான் குடிச்சேன் என்று சமாளிக்கின்றார்.

பின்னர் விடிந்ததும் ஈஸ்வரி காசிக்க கிளம்ப அவரை கவனமாக போய் வரச் சொல்லி மொத்தக் குடுமு்பமும் பேசிட்டு இருக்கின்றது. ராமமூர்த்தியை விட்டிட்டு போவது தான் கஷ்டமாக இருக்கு என ஈஸ்வரி சொல்ல இவர்களின் பாசத்தைப் பார்த்து எல்லோரும் ஆச்சரியப்படுவதோடு ஈஸ்வரியை வாசலுக்குச் சென்று வழியனுப்பியும் வைக்கின்றனர்.


தொடர்ந்து விடிந்ததும் கோபி எழுந்திருக்க ராதிகா வந்து காபி தரவா என்று நக்கலாக கேட்க கோபியும் காபி கேட்டு அவமானப்படுகின்றார்.பின்னர் ராதிகா கண்டபாட்டுக்கு திட்டி விட்டுச் செல்ல ராதிகாவின் அம்மா ராதிகாவை சமாதானப்படுத்துகின்றார். குடிக்கிறது தப்பு தான் ஆனால் அதை பொறுமையாக சொல்லலாம் தானே என்று சொல்கின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement