விஜய் டிவியில் யாரும் எதிர்பாராத திருப்பங்களுடன் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். இந்த சீரியலில் தமிழ் தன் சவால் விட்டிட்டு வெளியேறியது போல கொஞ்சம் கொஞ்சமாக கடுமையாக உழைத்து முன்னேறி வருகின்றார்.
தமிழின் அப்பா அர்ஜுன் தான் தப்பானவன் தமிழ் எந்த தப்பையும் செய்ய வாய்ப்பில்லை என்று கண்டு பிடித்து விட்டதோடு தமிழுடன் மீண்டும் சேர்ந்து விட்டார். இப்படியான நிலையில் தற்பொழுது ஓர் ப்ரமோ வெளியாகியுள்ளது.
அதில் வசுவின் பிள்ளையின் பெயர் சூட்டு விழாவுக்கு தமிழும் போகின்றார். அங்கே பக்கத்தில் பக்கத்தில் கோதையும் தமிழும் இருந்து சாப்பிடும் போது தமிழுக்கு விக்கல் எழ கோதை தண்ணீர் எடுத்துக் கொடுக்கின்றார்.
அதே போல கோதை கீழே விழப்போக தமிழ் தாங்கிப் பிடிக்கின்றார். இதையெல்லாம் பார்த்த அர்ஜுன் குடும்பம் அதிர்ச்சியடைகின்றது. இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.
Listen News!