• Sep 20 2024

"அரசாங்கம் அடிக்கடி power cut செய்து மக்களுக்கு உதவும்"; தமிழக அரசை கிண்டலடித்த நடிகை கஸ்தூரி..வைரலாகும் ட்விட்டர் பதிவு

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 90களில் டாப் நடிகைகளாக வலம் வந்தவர்களில் ஒருவர் நடிகை கஸ்தூரி. இவர் தமிழில் மட்டுமன்றி தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளிளும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். அத்தோடு 1992- ஆம் ஆண்டு மிஸ் சென்னை அழகி பட்டத்தையும் வென்றிருக்கின்றார். அது மட்டுமல்லாமல் இவர் தற்போது சினிமாவில் கிடைக்கும் வேடங்களில் எல்லாம் தயங்காமல் நடித்து வருகின்றார். அத்தோடு பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குபற்றியும் வருகின்றார்.

இவ்வாறாகத் தொடர்ந்து சினிமா, சின்னத்திரை என பிஸியாக உள்ள நடிகை கஸ்தூரி வெப் சீரிஸ்களிலும் அதிகளவில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் சினிமாவில் மட்டுமன்றி சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருபவர். இவற்றின் ஊடாக அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் சமூகம் சார்ந்த பிரச்சனைகள் குறித்து துணிச்சலாக குரல் கொடுத்து வருகிறார். அந்தளவிற்கு துணிச்சலான சிங்கப் பெண்ணாக மாறியிருக்கின்றார்.

இந்த நிலையில் இவர் தற்போது தமிழகத்தில் மின்வாரியம் மின் கட்டணத்தை அதிகரித்திருப்பது குறித்து ட்விட்டரில் பதிவு ஒன்றினை இட்டுள்ளார். அதாவது "TNEB மின்சார விலையேற்றம் எதிர்பார்த்ததுதான். ஆனால் கவலை வேண்டாம். மக்களின் Current bill சுமை அதிகரிக்காத வண்ணம் அரசாங்கம் அடிக்கடி power cut செய்து மக்களுக்கு உதவும் என்ற நம்பிக்கை உள்ளது." என கிண்டலாகப் பதிவிட்டுள்ளார்.

கஸ்தூரியின் இந்தப் பதிவிற்கு சமூக வலைத்தளங்களில் வழக்கம் போல் ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. அதுமட்டுமன்றி கர்நாடகாவை சேர்ந்த பலரும் கர்நாடகாவில் இதைவிட பல மடங்கு மின் கட்டணத்தை தாங்கள் செலுத்தியுள்ளதாகக் கூறி மின் கட்டண பில்களை ஷேர் செய்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகை கஸ்தூரி இட்ட இந்தப் பதிவு தற்போது சோஷியல் மீடியாக்களில் பேசு பொருளாக மாறி வருகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement