டிக் டாக் செயலி மூலம் தமிழ் மக்களிடம் நன்கு பிரபலமானவர் ஜி.பி.முத்து. அந்த செயலி தடை செய்யப்பட்டதும் யூடியூப் பக்கம் திறந்து அதில் நிறைய வீடியோக்கள் பதிவிட்டு வந்தார். இதன் மூலம் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.இடையில் பிக்பாஸ் 6வது சீசனிலும் கலந்து கொண்டார்.
அதன்பிறகு சில படங்கள், ஏகப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட ஜி.பி.முத்து இப்போது குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சியில் பங்குபெற்று வருகிறார்.தொடர்ந்து தனது யூடியூப் சேனலையும் நடத்தி வருகின்றார். தனது சேனல் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு அண்மையில் புதிதாக வெள்ளை நிற கியா கார் வாங்கியதாக வீடியோ போட்டு அலப்பறையை கிளப்பி இருந்தார்.
தற்பொழுது அவரின் கார் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஆனால், அதிர்ஷடவசமாக யாருக்கும் எந்த அடியோ, காயமோ ஏற்படவில்லையாம். கார் தான் டோட்டல் டேமேஜ் ஆகி விட்டதாக எமோஷனலாகி வீடியோ ஒன்றை வெளியிட்டு தனது சோக கதையை சொல்லி இருக்கிறார் ஜி.பி. முத்து.
மதுரைக்கு சென்றுக் கொண்டிருந்த போது, ஒரு இடத்தில் பாலத்தின் மீது பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதை அறிந்து தனது காரை நிறுத்தியிருக்கிறார் ஜி.பி. முத்து. ஆனால், பின்னால் வந்த ஒரு கார் இந்த கார் பிரேக் போட்டு நிறுத்துவதை கவனிக்காமல் படு வேகமாக வந்ததில் ஜி.பி. முத்து காரின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி உள்ளனர்.
ஆக்ஸிடன்ட் பண்ண காரில் இருந்தவர்களுக்கு என்ன ஆனது? என்று துடித்துப் போய் பார்த்ததில் ஒரு கணவர், மனைவி, குழந்தை இருந்திருக்கிறது. அதிர்ஷ்டவசமாக அவர்களுக்கும் ஒன்றும் ஆகவில்லை. பேசி பிரச்சனையை தீர்க்க ஜி.பி. முத்துவும் அந்த நபரும் முயற்சி செய்யும் போது, வேடிக்கை பார்க்க கூடியவர்கள் பிரச்சனையை பெரிதாக்க முயற்சிப்பதாகவும் அவர் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!