தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக வலம் வருபவர் தான் ஏ.ஆர் ரகுமான்.இவர் இறுதியாக பொன்னியின் செல்வன் படத்திற்கு இசையமைத்துள்ளதோடு பொன்னியின் செல்வன் படத்தின் ப்ரமோஷன் பணிகளிலும் படு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார்.
இந்த நிலையில் ஏ ஆர் ரகுமான் புகழை களங்கப்படுத்துவதற்காகவே மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ள நிலையில் இதுகுறித்து ஜிஎஸ்டி ஆணையர் விளக்கமளித்துள்ளார்
ஜிஎஸ்டி வரிஏய்ப்பு செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளது என்றும் அதனால்தான் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானுக்கு நோட்டீஸ் அனுப்பப் பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
ரூ.6.79 கோடி வரி மற்றும் 6.79 கோடி அபராதம் செலுத்த கூறிய நோட்டீஸை எதிர்த்து ஏஆர் ரஹ்மானின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்ததாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!