தமிழ் மற்றும் மலையாளம் இரு மொழிகளிலும் பிரபலமான நடிகர் கின்னஸ் பக்ரு. இவர் தமிழில் வெளிவந்த டிஷும், காவலன், 7ஆம் அறிவு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
ஆனால், மலையாளத்தில் பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் கடந்த 2006ஆம் ஆண்டு காயத்ரி மேனன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு தீப்தா கீர்த்தி என ஒரு மகளும் உள்ளார்.
இந்நிலையில் கின்னஸ் பக்ருவுக்கும் அவரது மனைவிக்கும் கடந்த மாதம் இரண்டாவது பெண் குழந்தை பிறந்தது. ஏற்கனவே அவர்களுக்கு 17 வயதில் பெண் குழந்தை இருக்கும் நிலையில் தற்போது இரண்டாவது பெண் குழந்தை பிறந்திருக்கிறது.
தற்போது இரண்டாம் மகளை கையில் வைத்து இருக்கும் போட்டோவை பக்ரு வெளியிட்டு இருக்கிறார். இதற்கு பலரும் வாழ்த்துக்களையும் லைக்ஸுகளையும் குவித்து வருகிறார்கள்.
Listen News!