• Nov 14 2024

கின்னஸ் சாதனை புரிந்த மறைந்த நடிகை மனோரமாவின் பிறந்த நாள் இன்று- புகைப்படங்களை பகிர்ந்து வரும் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களிலும் முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்து பிரபல்யமானவர் தான் மூத்த நடிகை மனோரமா. கோபிசாந்தா என்னும் பெயரைக் கொண்ட இவர் சினிமாவிற்கு வந்த பிறகே தன்னுடைய பெயரை மாற்றிக் கொண்டார்.

சிறுவயதிலேயே பாடுவதில் ஆர்வம் பெற்று இருந்த இவர் நாடகத்துறையிலும் அதிக அக்கறை செலுத்த ஆரம்பித்தார். இதனைத் தொடர்ந்து கவிஞர் கண்னதாசனால் சினிமாவில் அறிமுகமானார்.

அத்தோடு இவர் 1500 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தமிழகத்தின் 5 முதல்வர்களோடு நடித்தவர் எனும் பெருமைக்குரியவர் ஆச்சி மனோரமா. மேலும் 5000 நாடகங்களிலும் நடித்துள்ளதன் மூலம் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றவர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அவர் உடல்நலக் குறைவு காரணமாக இறந்துவிட்ட நிலையில் இன்று அவரது 84 ஆவது பிறந்தநாள் ரசிகர்களால் நினவுகூறப்பட்டு வருகிறது. சமூகவலைதளத்தில் பலரும் அவரது புகைப்படங்களைப் பகிர்ந்தும் வாழ்த்துகளைக் கூறியும் வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/zLrMOjBkRZU

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement