• Nov 17 2024

சிவகார்த்திகேயனோடு போட்டி போட்டு வென்ற குணா..கடைசியில் படங்கள் நடிக்காததற்கு இது தான் காரணமா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

 சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர், மதுரை முத்து உள்ளிட்டவர்களுடன் விஜய் டிவியில் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் ஒன்றாக காமெடி செய்து கலக்கிய கோவை குணா இன்று திடீரென மரணமடைந்தார்.

விஜய் டிவியில் இருந்து சினிமாவுக்கு கோவை குணாவுடன் காமெடி செய்த பலரும் முன்னேறிய நிலையில், தான் ஏன் அதிக படங்களில் கமிட்டாகவில்லை என்பது குறித்து அவரே பழைய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

கடந்த 2005ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட கோவை குணா சிவாஜி கணேசன், லூசு மோகன், ஜனகராஜ், கவுண்டமணி என ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் போல மிமிக்ரி செய்து அசத்திய நிலையில், அந்த சீசன் டைட்டிலையே அவர் தான் வென்றார். அத்தோடு இரண்டாவது சீசன் டைட்டிலை சிவகார்த்திகேயன் தட்டித் தூக்கினார்.


சிவகார்த்திகேயனுக்கு முன்னதாகவே கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் டைட்டில் வென்ற கோவை குணா 2006ம் ஆண்டு பரத், ஜெனிலியா நடிப்பில் விக்ரமன் இயக்கத்தில் வெளியான சென்னை காதல் படத்தில் காமெடி நடிகராக அறிமுகமானார். ஆனால், அதற்கு பிறகு அதிகமாக சினிமா படங்களில் அவர் நடிக்கவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்த சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர், மதுரை முத்து உள்ளிட்ட பலரும் சின்னத்திரை, வெள்ளித்திரை என பிரபலங்கள் ஆன நிலையில், கோவை குணா தொடர்ந்து மேடைகளில் மிமிக்ரி நிகழ்ச்சிகளையே நடத்தியே  வந்தார்.


கோவை குணாவின் த்ரோபேக் பேட்டி ஒன்று சோசியல் மீடியாவில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது. அதில், ரசிகர்களை சிரிக்க வைக்கிறது கஷ்டம் ஈஸியா அழ வைத்து விடலாம் என ஆரம்பித்து தனது வாழ்க்கை பற்றியும் சினிமாவில் அதிகம் ஆர்வம் செலுத்தாதது குறித்தும் அவர் பேசியுள்ளார்.

சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர் போல சினிமாவில் அதிகம் நடிக்காமல் இருப்பது ஏன் என்கிற தொகுப்பாளரின் கேள்விக்கு பதில் அளித்த கோவை குணா மேடையில் நல்லா காமெடி பண்ணி பெயர் வாங்குறதை டிவி நிகழ்ச்சிகளிலும்  சினிமாவில் சென்று நடித்தும் கெடுத்து விடுவேனோ என்கிற பயம் தான் நிறைய படங்களில் நடிக்காததற்கு காரணம் என்று பதில் அளித்துள்ளார்.

Advertisement

Advertisement