• Sep 20 2024

மாஸாக வந்திறங்கிய ஜீவானந்தம்... எட்டிப் பார்த்த குணசேகரன்... இனி நடக்கப் போவது என்ன..? அதிரடித் திருப்பங்களுடன் 'எதிர்நீச்சல்'..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப் சீரியல்களில் அதிகம் மக்கள் விரும்பிப் பார்க்கும் சீரியல் 'எதிர்நீச்சல்'. இந்த சீரியலானது ஏனைய சீரியல்களை விடவும் ஏராளமான ரசிகர்களைக் கொண்டுள்ளது. மேலும் இந்த சீரியலானது அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பை அடிக்கடி தூண்டிய வண்ணம் இருக்கின்றன.


இந்நிலையில் தற்போது இன்றைய நாளுக்குரிய ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் ஜனனியும் சக்தியும் "அப்பப்போ கண் முழிச்சாலும் பதற்றத்தோடு அப்பத்தா சொன்ன பெயர், விடை தெரிஞ்சுக்கிறதற்காக தெரியாத விலாசத்திற்கு எல்லாம் என்னை அலைய வச்ச பெயர், பல நாட்கள் காதில மட்டுமே கேட்டு எப்போ அவரைப் பார்ப்போம் என்ற ஆர்வத்தை தூண்டுற பெயர் ஜீவானந்தம்" எனக் கூறி பேசிக் கொள்கின்றனர்.


மறுபுறம் குணசேகரன் வீட்டில் மாஸாக வந்து இறங்குகின்றார் ஜீவானந்தம். குணசேகரன் யார் எனத் தெரியாமல் திரும்பி எட்டிப் பார்க்கின்றார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது. ஜீவனந்தத்தைப் பார்த்ததும் குணசேகரனின் ரியாக்ஷன் எப்படி இருக்கப் போகிறது என்பதனைப் பொறுத்திருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement