• Sep 21 2024

அருணின் முடிவால் கதறி அழும் ஆதிரை... கை ஒரு பக்கம் இழுத்தது போல் நடிக்கும் குணசேகரன்... கதிருக்குத் தெரிய வந்த உண்மை... சூடு பிடிக்கும் 'எதிர்நீச்சல்' ப்ரோமோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல ஹிட் சீரியல்களில் ஒன்றுதான் 'எதிர்நீச்சல்'. இந்த சீரியலானது ரசிகர்களின் விறுவிறுப்பைத் தூண்டியவாறு அதிரடித் திருப்பங்களுடன் நகர்ந்த வண்ணம் இருக்கின்றது. இந்நிலையில் இன்றைய தினம் என்ன நடைபெறவுள்ளது என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது.


அதில் ஆதிரை அருணைப் பார்க்க சென்றுள்ளார். அங்கு அருண் கால் உடைந்த நிலையில் உள்ளார். ஆதிரையைக் கண்ட அரசு, இவ வந்திருக்கா என்று அண்ணனுக்கு தெரிந்தால் என்ன நடக்கும் தெரியுமா..? எனக் கேட்கின்றார். பதிலுக்கு ஆதிரை "தயவுசெய்து என்னைப் புரிஞ்சு கொள்ளுங்க அங்கிள்" எனக் கெஞ்சுகின்றார்.


அதற்கு அருண் "இனிமேல் ஆதிரை என்ற ஒரு பெண் என் லைஃபில் இல்லை, போக சொல்லுங்க" எனக் கூறுகின்றார். இதனையடுத்து ஆதிரை கதறி அழுகின்றார். 


மறுபுறம் குணசேகரன் தன்னுடைய கையைத் தூக்கி அசைக்கின்றார். அதற்கு அருகில் இருந்த நபர் "என்ன கையெல்லாம் மேல தூக்கிறீங்க" எனக் கேட்கின்றார். பதிலுக்கு குணசேகரன் "அது அப்ப அப்ப மேல வரும் சார், கையில் எல்லாம் ஒரு பிரச்சினையும் இல்ல சார், எல்லாம் நடிப்பு சார், அதுக்கெல்லாம் ஒரு காரணம் இருக்கு" என்கிறார். குணசேகரன் கை ஆட்டி அசைப்பதை பார்த்த கதிரும் ஆச்சர்யமடைகின்றார்.


இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது. 

Advertisement

Advertisement