• Sep 20 2024

ஜீவானந்தத்தின் பிரச்சினை மத்தியிலும் தம்பி மனைவிகளுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்ட குணசேகரன்- ட்ரெண்டாகும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல் தான் எதிர் நீச்சல். விறுவிறுப்பாக இந்த சீரியல் சென்று கொண்டிருப்பதால் இதற்கென்று தனி ரசிகர் பட்டாளம் காணப்படுகின்றது. யாரும் எதிர்பாராத விதமாக பல டுவிஸ்ட்களுடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது.

ஜீவானந்தம் என்பவர் பெயருக்கு, பட்டம்மாளின் 40% சொத்துக்களும் போய்விட்டது என்கிற அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீண்டு வராத குணசேகருக்கு அடுத்தடுத்த அதிர்ச்சிகள் ஜீவானந்தத்தின் மூலம் நடந்து வருகிறது. ஜனனி ஜீவனந்தத்துடன் சேர்ந்து கொண்டு தன்னை ஏமாற்ற இப்படி ஒரு நாடகத்தை போட்டு வருகிறார் என குணசேகரன் நினைத்து கொண்டிருக்கிறார்.


ஆனால் கௌதம் என்பவருடன் இணைந்து தான் ஜீவானந்தம் இப்படி செய்திருப்பது குணசேகரன் குடும்பத்திற்கு பேரதிர்ச்சியாகவே உள்ளது.இதனால் அடுத்து என்ன நடக்கப்போகின்றது ஜனனி இந்த பிரச்சினையை சமாளிக்கப்போகின்றார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர்.

இந்த நிலையில் பிரபல சீரியல் நடிகர் வீட்டில் நடந்த விஷேசத்திற்கு எதிர்நீச்சல் சீரியல் பிரபலங்கள் சென்று நடனமாடியுள்ளனர். அதிலும் மாரிமுத்து நடனமாடிய வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருவதைக் காணலாம். 



Advertisement

Advertisement