• Sep 21 2024

கதிருக்கு குணசேகரன் பண்ணிய அட்வைஸ்... சேலையை நீட்டிய ஜான்சிராணி... முகத்தடி கொடுத்த ஆதிரை.. விறுவிறுப்பின் உச்சத்தில் 'எதிர்நீச்சல்'..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப் சீரியல்களில் அதிகம் மக்கள் விரும்பிப் பார்க்கும் சீரியல் 'எதிர்நீச்சல்'. இந்த சீரியலானது ஏனைய சீரியல்களை விடவும் ஏராளமான ரசிகர்களைக் கொண்டுள்ளது. மேலும் இந்த சீரியலானது அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பை அடிக்கடி தூண்டிய வண்ணம் இருக்கின்றன.


இந்நிலையில் இன்றைய நாளுக்குரிய ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் குணசேகரன் கதிரிடம் "உங்களுக்குள்ள என்னமோ நடக்குதுப்பா, ஆதிரை கழுத்தில் தாலி ஏறுற வரைக்கும் கண்ணில விளக்கெண்ணெயைத் ஊற்றிட்டு பாத்திட்டு இருக்கணும்பா" எனக் கூறுகின்றார்.


மறுபுறம் ஜான்சிராணி விசாலாட்சியிடம் "மரியாதையாக இதைக் காட்டிற்று என் மகனுக்கு பக்கத்தில் வந்து நிக்க சொல்லுங்க என" ஒரு சேலையை கொடுத்துக் கூறுகின்றார். அதற்கு ஆதிரை "எனக்குப் பிடிக்கல" எனக் கூறி முகத்தடி கொடுக்கின்றார். பதிலுக்கு ஜான்சிராணி "சேலையைப் பிடிக்கலையா..? என் மகனைப் பிடிக்கலையா..?" எனக் கேட்கின்றார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது.


Advertisement

Advertisement