சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல ஹிட் சீரியல்களில் ஒன்றுதான் 'எதிர்நீச்சல்'. இந்த சீரியலானது ரசிகர்களின் விறுவிறுப்பைத் தூண்டியவாறு அதிரடித் திருப்பங்களுடன் நகர்ந்த வண்ணம் இருக்கின்றது. இந்நிலையில் நேற்றைய எபிசோட்டில் என்ன நடந்துள்ளது என்பதை பார்ப்போம்.
அந்தவகையில் நெஞ்சுவலியால் கதிர் மற்றும் கரிகாலனின் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குணசேகரன் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கின்றார். வெளியே கதிர் மற்றும் கரிகாலன் மிகவும் டென்ஷனுடன் உள்ளனர். அப்போது கரிகாலன் வள வளன்னு பேசி கதிரை மேலும் டென்ஷனாக்கி கொண்டு இருக்கிறான்.
பின்னர் டாக்டர் வந்து "அவருக்கு இதற்கு முன்னர் இது போல வந்துள்ளதா அல்லது வேறு ஏதாவது பிரச்சனை இருக்கிறதா" என்பதை கேட்டு அறிகின்றார். அந்த சமயத்தில் ஆடிட்டர் வருகிறார். உடனே கதிர் கோபத்துடன் இருக்க, ஆடிட்டரை பார்த்து கரிகாலன் "இங்க எதுக்குயா வந்தாய், நீ வந்தாலே அணுகுண்டை தான் போடுற?" என கரிகாலன் கூறுகின்றார்.
பதிலுக்கு ஆடிட்டர் "என்னை ஏன் காரணம் சொல்றீங்க? அந்த ஜீவானந்தம்{" என இழுக்கின்றார். இதனைக் கேட்டதும் கதிர் ஆடிட்டரை அடிக்க கை ஓங்குகிறான். அதுமட்டுமல்லாது "அந்த திருட்டு பயல கொலை செய்யாம விடமாட்டேன்" என ஜீவானந்தம் மீது கோபத்தில் கத்துகின்றார். அதற்கு ஆடிட்டர் "ஹாஸ்பிட்டலில் இப்படி கத்தினால் வேறு ஏதாவது பிரச்சனை வரும்" என சொல்லி சமாதானப் படுத்துகின்றார்.
அந்த சமயத்தில் சக்தி, ஜனனி, ஈஸ்வரி மற்றும் நந்தினி ஹாஸ்ப்பிட்டலுக்கு வருகின்றனர். அவர்களைக் கண்ட கதிர் "மரியாதையா எல்லாரும் இங்க இருந்து கிளம்புங்க. இங்க நடக்குறதை எல்லாம் போய் அந்த திருட்டு பய கிட்ட போட்டு கொடுத்துட்டு இருக்கீங்க" எனக் கூறி மீண்டும் மீண்டும் கத்துகின்றார். இவ்வாறாக அனைவரையும் கதிர் விரட்டி அடிக்க நந்தினி "ஈஸ்வரி அக்கா அவரோட பொண்டாட்டி அவங்களை நீ எப்படி வெளிய போ என சொல்லலாம்" என கேட்கிறாள்.
அதற்கு கதிர் "தாலிய கட்டிக்கிட்டு இரண்டு பிள்ளையை பெத்துக்கிட்டா உடனே பொண்டாட்டியா?" என கேட்டு ஈஸ்வரியை கேவலமாக பேசுகின்றார். பதிலுக்கு ஜனனி "உங்க அண்ணன் என்னிக்காவது அவங்க மேல அன்ப காட்டி இருக்காரா? எதுக்கு எடுத்தாலும் அடிக்க கை ஓங்கிறது. அடிமையா தானே வைச்சு இருந்தாரு" எனக் கூற அவர்களுக்கு இடையே பெரிய சண்டையே வெடிக்கிறது.
பின்னர் அந்த இடத்திற்கு வந்த நர்ஸ் "சத்தம் போடாமல் எல்லாரும் இங்க இருந்து கிளம்புங்க" எனக் கூற கதிர் வட்னி அவர்கள் அனைவரையும் விரட்டி விடுகிறான். இதனைத் தொடர்ந்து கீழே வந்த ஈஸ்வரி "நான் போய் ஜீவானந்தத்திடம் பேச போகிறேன். அவருக்காகவோ அப்பத்தாவுக்காக இல்லாட்டியும் நியாயம் என்ற ஒன்று இருக்கா இல்லையா அதுக்காவது நா போய் பேசப்போகிறேன்" என ஜனனியிடம் தெரிவிக்கின்றார்.
அதற்கு ஜனனியும் "ஆமா அக்கா அவருடைய உழைப்பை திருடியது மிக பெரிய குற்றம்" என்கிறார். அதன் பின்னர் சக்தியை ஹாஸ்பிடலிலேயே இருக்க சொல்லிவிட்டு நந்தினி, ஜனனி, ஈஸ்வரி செல்கிறார்கள். அந்த சமயத்தில் அங்கு வானத்த கரிகாலனிடம் நந்தினி ஜீவானந்தத்தை சந்தித்து சொத்தை வாங்கி வர போவதாக கூறி விட்டு செல்கிறார்.
பின்னர் அங்கு வந்த ஞானமும் குணசேகரன் நிலையை அறிந்து ஆடிட்டரை திட்டுகிறான். அப்போது அங்கு வந்த டாக்டர் வந்து "குணசேகரனுக்கு அதிர்ச்சியில் மூளையில் பாதிப்பு ஏற்பட்டு வலது பக்கம் செயல் இழந்துவிட்டது. அவரின் வலது கை கால் செயலிழந்து விட்டது. ஆனால் அது எந்த அளவில் இருக்கிறது என்பதை அவர் கண் விழித்த பிறகு தான் தெரியவரும்" எனக் கூறுகின்றார். இதனால் அங்கு இருந்த அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.
பின்னர் குணசேகரன் கண் விழித்ததும் நர்ஸ் வந்து அவர்களை சத்தம் போட வேணாம் என்கிறார். பின்னர் உள்ளே சென்ற அனைவரும் குணசேகரனின் பரிதாப நிலையை பார்த்து கவலைப்படுகிறார்கள். கண் விழித்த குணசேகரன் "என்னப்பா ஆச்சு எனக்கு. ஹாஸ்பிடல் வர வரைக்கும் தான் ஞாபகம் இருக்கிறது. அப்புறம் என்ன நடந்தது? டாக்டர் என்ன சொன்னார்" என திரும்பத் திரும்பக் கேட்கிறார்.
குணசேகரன் கேள்விக்கு யாரும் பதில் சொல்லாமல் கலங்கி நிற்கிறார்கள். மீண்டும் குணசேகரன் "என்னோட வலது கையும், காலும் மரத்துப் போன மாதிரி இருக்கு ஊசி போட்டதால் அப்படி இருக்கா" எனக் கேட்கின்றார். அதற்கு உடனே ஞானம் "ஒரு இரண்டு வாரத்துக்கு அப்படி இருக்கும் அப்புறம் சரியாகிவிடும்" எனப் பதிலளிக்கின்றார்.
அதற்கு குணசேகரன் "அப்போ என்னோட வலது கை இனிமே விளங்காதா? அவ்வளவு தானா நான் இனிமே எப்படி சாப்பிடுவேன், நாலு பேரை பார்த்த எப்படி கை கொடுப்பேன். இனிமேல் என்னை எல்லாரும் ஒத்த கை குணசேகரன்னு தான் கூப்பிடுவாங்க. மானம் மரியாதை எல்லாம் போச்சு இப்போ கையும் போச்சு, டாக்டர் கிட்ட சொல்லி ஊசி போட்டு என்ன கொன்னுட சொல்லுங்க பா" எனக் கூறிப் புலம்புகின்றார். இவ்வாறாக இந்த எபிசோட் அமைந்துள்ளது.
Listen News!