• Sep 20 2024

பர்ஸ்ட் நைட்டிற்காக துடிக்கும் கரிகாலன்... விரட்டியடிக்கும் விசாலாட்சி.. ஜான்சிராணிக்கு தெரிய வந்த உண்மை... நடந்ததை மறைத்த குணசேகரன்... சூடு பிடிக்கும் 'எதிர்நீச்சல்' ப்ரோமோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'எதிர்நீச்சல்' சீரியலிற்கு என்று ஏராளமான ரசிகர்கள் உண்டு. இந்த சீரியலானது ரசிகர்களின் விறுவிறுப்பைத் தூண்டியவாறு அதிரடித் திருப்பங்களுடன் நகர்ந்த வண்ணம் இருக்கின்றது. இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது. 


அதில் கரிகாலனை போகுமாறு சொல்லி விசாலாட்சி துரத்துகின்றார். பதிலுக்கு கரிகாலன் "என் பொண்டாட்டிய கூட அனுப்பி வையுங்க, எங்க வீட்டில போயிற்று பர்ஸ்ட் நைட்டுக்கு ஏற்பாடு பண்ணிக்கிறேன்" என்கிறார்.


அதற்கு ஜான்சிராணி "பர்ஸ்ட் நைட் எல்லாம் முடிஞ்சுது என்று சொன்னியேடா" எனக் கேட்கின்றார். "அப்பிடி தான் ஆதிரை சொல்ல சொன்னா" என கரிகாலன் பதிலளிக்கின்றார். 


மறுபுறம் குணசேகரனிடம் ஒருவர் "என்னப்பா கையை ஒரு மாதிரி புரட்டி வச்சிருக்காய்" எனக் கேட்கின்றார். அதற்கு குணசேகரன் "அரிசி மூட்டை மேல விழுந்திருச்சு, சுளுக்கிடிச்சு, சில வேலைகளை நம்ம தானே பார்க்கணும்" என மழுப்பலாக பதிலளிக்கின்றார். 


இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது.

Advertisement

Advertisement