• Nov 17 2024

7 படங்களில் நடித்திருந்தாலும் பிரமாண்டமான வீட்டைக் கட்டியிருக்கும் ஜி வி பட நடிகர்- அடேங்கப்பா!அரண்மனை மாதிரி இருக்கே

stella / 1 year ago

Advertisement

Listen News!


2017ம் ஆண்டு வெளியான 8 தோட்டாக்கள் திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் வெற்றி. ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் போலீஸ் கேரக்டரில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தார்.  இதனைத் தொடர்ந்து  ஜிவி, கேர் ஆஃப் காதல், வனம், ஜோதி, ஜிவி 2, மெமரீஸ் என மொத்தமே 7 படங்களில் நடித்துள்ளார் 


இந்நிலையில் கடந்தாண்டு திருமணமும் முடித்துவிட்டு ஃபேமிலி மேன் ஆகிவிட்ட வெற்றியின் ஹோம் டூர் வீடியோ ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மூன்று மாடியுடன் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்த வீட்டின் முன்பகுதியில் 3 கார்களை நிறுத்தி வைத்துள்ளார்.


சினிமாவில் நடிக்க வந்ததும் 60 லட்சம் மதிப்புள்ள கறுப்பு நிற BMW 3 சீரிஸ் வாங்கியுள்ளாராம். கூடவே ஒரு பார்ச்சூனர் கார், திருமணத்திற்கு கிஃப்ட்டாக வந்த மினி கூப்பர் காரையும் தனது வீட்டில் கெத்தாக நிறுத்தி வைத்துள்ளார் வெற்றி. வீட்டின் உள்ளே போனால், கதை கேட்பதற்காக ஒரு மினி ஆபிஸ் உள்ளது. அங்கே தான் அவரும் அவரது அப்பாவும் கதை கேட்டு ஓக்கே சொல்வார்களாம்.


 அடுத்து அப்படியே லிவிங் ஹால் போனால், அது அரண்மனையை கண் முன் வந்து நிறுத்துகிறது. ஸ்டேட் லெவல் அதெல்ட் வீரரான வெற்றியின் கோப்பைகளை அடுக்கி வைக்கவே பெரிய ஷோக்கேஷ்கள் இருக்கின்றன.


அதன்பிறகு தனது குடும்பம் குறித்து விவரித்துள்ள வெற்றி, அம்மா, அப்பா, அக்கா, தம்பி, மனைவி குறித்தும் பெருமையாக பேசியுள்ளார். நெல்லையைச் சேர்ந்த வெற்றியின் அப்பா ஒருவகையில் கோபுரம் ஃபிலிம்ஸ் அன்புச் செழியனின் தூரத்து சொந்தம் என்றும் சொல்லப்படுகிறது. மேலும் அவரும் மிகப் பெரிய ஃபைனான்சியர் என்பதால், வெற்றியின் படங்களை அவரது அப்பாவே சொந்தமாக தயாரித்துள்ளார். 


மிகப் பெரிய மெத்தை, ஏசி, எல்.இ.டி டிவி என ரூமையே மினி தியேட்டராக மாற்றி வைத்துள்ளார் வெற்றி. அதுமட்டுமா! ரூம் பக்கத்திலேயே பிரம்மாண்டமான ஜிம் வைத்து தினமும் ஒர்க் அவுட் செய்கிறாராம். அதற்கும் மேலே மாடித் தோட்டம் என சகல வசதிகளையும் தனது வீட்டுக்குள் செட் செய்துள்ளார் வெற்றி. மொத்தமே 7 படங்கள் மட்டுமே நடித்துள்ள வெற்றி, இவ்வளவு பிரம்மாண்டமான வீட்டுக்குச் சொந்தகாரர் என தெரிந்ததும் ரசிகர்களே அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.



Advertisement

Advertisement