தமிழ் சினிமாவில் நடிகராகவும், இசையமைப்பாளராகவும், தற்போது இயக்குனராகவும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் தான் ஜி வி பிரகாஷ். ஜி வி பிரகாஷ், இவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் மதயானைக் கூட்டம் என்ற திரைப்படத்தைத் தயாரித்திருந்தார். இப்படம் , வசூல் ரீதியாக தோல்வியை சந்தித்தது. அதையடுத்து இப்போது மீண்டும் படத்தயாரிப்பில் இறங்கி இருக்கின்றார்.
இந்நிலையில் காதலிக்க யாரும் இல்லை என்ற படத்தை இயக்கிய கமல் பிரகாஷ் என்பவர் இயக்கும் கிங்ஸ்டன் என்னும் படத்தில் ஜீ வி பிரகாஷ் நடிக்க கமிட் ஆகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.
இந்த படம் ஜி வி பிரகாஷின் நடிப்பில் உருவாகும் 25 ஆவது படமாக அமையும் என சொல்லப்படுகிறது. இந்த படத்துக்கு பட்ஜெட்டாக 20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. பேன் இந்தியா படமாக இந்த படம் உருவாவதால் பட்ஜெட் அதிகமாக போடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
Listen News!