தமிழ் சினிமாவில் நடிகராகவும், முன்னணி இசையமைப்பாளராகவும் கலக்கி கொண்டிருப்பவர் ஜிவி பிரகாஷ். இவர் என்னதான் நடிகராக தற்போது நடித்தாலும், இவருடைய ரசிகர்கள் விரும்பி எதிர்பார்ப்பது இவருடைய இசையை மட்டுமே. அதனாலேயே தொடர்ந்து பல படங்களுக்கு தரமான பாடல்களை கொடுத்து வருகிறார்.
இருப்பினும் இவரது நடிப்பினை ரசிப்பதற்கு என்றும் ஒரு ரசிகர் கூட்டம் உள்ளது. அந்தவகையில் இவர் தற்போது விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் அடியே திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படமானது வருகிற ஆகஸ்ட் 25-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இதனையடுத்து இப்படத்தினுடைய ப்ரோமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் நடிகர் ஜிவி பிரகாஷ் திடீரென சென்னையில் உள்ள பிரபல திரையரங்கம் ஒன்றிற்கு சென்று அங்கு நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்த 'ஜெயிலர்' பட டிக்கெட்டுகளை விற்பனை செய்துள்ளார்.
இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் ஆச்சர்யம் அடைந்துள்ளனர். ஏனெனில் ஜெயிலர் பட டிக்கெட்டினை ஜிவி பிரகாஷ் விற்பனை செய்தது 'அடியே' படத்தின் ப்ரமோஷனுக்காகத் தானாம். இவருடைய இந்த வித்தியாசமான ப்ரோமோஷன் நடவடிக்கை ஆனது பலரையும் கவர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதோ அந்த வீடியோ..!
@gvprakash selling movie tickets is the best thing on internet today 😩💗#AdiyaeFromAug25th #Adiyae pic.twitter.com/DXF3nC2ZOc
Listen News!