• Nov 15 2024

வெட்கம் கலந்த முகத்துடன்... இரவு நேரத் திருமணப் புகைப்படங்களை வெளியிட்ட ஹன்ஷிகா...!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகாலில் ஒருவராக கொடி கட்டிப் பறந்து வருபவர் நடிகை ஹன்ஷிகா. இவர் சமீபத்தி தான் தன்னுடைய நீண்ட நாள் நண்பரும், பிசினஸ் பார்ட்னரும், மற்றும் தோழியின் முன்னாள் கணவருமான சோஹைல் கதுரியா என்பவரைத் தான் திருமணம் செய்து கொண்டு மண வாழ்வில் இணைந்திருக்கின்றார்.


இவர்களின் திருமணத்திற்கு முன்பாகவே ஒரு சில சடங்குகள் கோலாகலமாக நடந்து வந்தன. அந்தவகையில் ஏற்கனவே கடந்த மாதம் 22 ஆம் தேதி, ஹன்சிகா மற்றும் சோஹைல் கதுரியா இருவருக்கும் மாதா கி சோகி என்கிற சடங்கு நடந்த போது, ஹன்சிகா மற்றும் மணமகன் ஆகிய சோஹைல் கதுரியா இருவரும் சிகப்பு நிற உடையில் இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி இருந்தன.


இதனைத் தொடர்ந்து ஹன்சிகா - சோஹைல் கதூரியா ஜோடியின் திருமணம் ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகள் பழமைவாய்ந்த முண்டோடா அரண்மனையில் இரவு நேரத்தில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இந்நிலையில் இவரின் திருமணம் குறித்த புகைப்படங்கள் வெளிவந்த வண்ணம் தான் இருக்கின்றன. அந்தவகையில் தற்போது ஹன்ஷிகா தனது இரவு நேரத் திருமணப் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருக்கின்றார். இதற்கு ரசிகர்கள் பலரும் தங்களுடைய லைக்குகளை அள்ளிக் குவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement