• Sep 20 2024

ஹன்சிகா மற்றும் சிம்பு இணைந்து நடித்த படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு….!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தொலைக்காட்சி தொடரின் மூலமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் தன் நடிப்புத் திறமையினால் கதாநாயகியாக வளர்ந்து நிற்பவரே சின்னக் குஷ்பூ என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் நடிகை ஹன்ஷிகா மோத்வானி. இவர் தமிழில் மட்டுமன்றி தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளிலும் முன்னணி கதாநாயகர்கள் பலருடன் ஜோடியாக இணைந்து நடித்துள்ளார்.

'அரண்மனை' படத்தில் பேயாக நடித்து இன்றும் ரசிகர்கள் பலரின் மனங்களில் குடியிருக்கும் நடிகையாக திகழ்ந்து வருகின்றார் ஹன்ஷிகா மோத்வானி. இவரின் குழந்தைத் தனமான நடிப்பிற்கும், அழகிய தோற்றத்திற்கும் என்றே பல்லாயிரக்கணக்கான ரசிகர் கூட்டம் உண்டு.

தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகின்ற ஹன்சிகாவின் நடிப்பில் வெளியாகவிருக்கும் 50-ஆவது படம் 'மஹா'. இப்படமானது சோலோ ஹீரோயினை கதைக்களமாகக் கொண்டு அமைந்து இருக்கின்றது. இப்படத்தில் நடிகர் சிம்பு கெளரவ வேடத்தில் நடிக்கின்றார். மேலும் இவர்களுடன் இணைந்து இப்படத்தில் ஸ்ரீகாந்த், கருணாகரன், சனம் ஷெட்டி, தம்பி ராமையா, பேபி மானஸ்வி உட்படப் பலர் இணைந்து நடித்துள்ளனர். அத்தோடு இப்படத்தினை யு.ஆர்.ஜமீல் இயக்கியுள்ளதோடு எலெட்க்ரா எண்டர்டெயிண்ட்மென்ட் நிறுவனம் சார்பில் வ.மதியழகன் மற்றும் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கிரியேஷன்ஸ் சார்பில் டத்தோ அப்துல் மாலிக் ஆகியோர் இணைந்து தாயாரித்து உள்ளார்கள்.

இந்தப் படத்தினுடைய படப்பிடிப்புகள் முடிவடைந்து 2 ஆண்டுகளிற்கு மேலாகியும் தயாரிப்பாளருக்கு இருந்த ஒரு சில பிரச்சினைகளின் காரணமாக இப்படம் இன்னமும் வெளியாகவில்லை. இந்த நிலையில் இப்படம் வருகிற ஜூலை மாதம் 22-ஆம் திகதி வெளியாகவிருக்கின்றது. இதன் தமிழ்நாட்டு விநியோக உரிமையை ஆன்ஸ்கை என்ற நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இப்படமானது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. ஏனெனில் நடிகர் சிம்புவும், ஹன்ஷிகாவும் நிஜத்தில் காதலர்களாக இருந்து பின்னர் பிரிந்த விடயம் திரையுலகம் முழுவதுமே தெரியும். இந்த நிலையில் இவர்கள் இருவரும் ஒரே படத்தில் இணைந்து நடித்தமை தற்போது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

எனினும் 2-ஆண்டுகளாகியும் வெளியாகாமையினால் இந்தப் படம் குறித்த திகதியில் வெளியாகுமா என்ற சந்தேகத்தில் தற்போது உள்ளனர் நடிகர் சிம்பு மற்றும் ஹன்சிகாவின் ரசிகர்கள்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement